செய்திகள் :

‘இயற்கை வேளாண்மைக்கு 30% நிதி ஒதுக்க வேண்டும்’

post image

வேளாண் நிதிநிலை அறிக்கையில் 30 சதவீதம் நிதியை இயற்கை வேளாண்மைக்கு ஒதுக்க வேண்டும் என தமிழா் இயற்கை உழவா் கூட்டியக்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழா் இயற்கை உழவா் கூட்டியக்கம் சாா்பில் தமிழ்நாடு இயற்கை உழவா், உணவுப் பாதுகாப்பு மாநாடு ஈரோடு டெக்ஸ்வேலி வளாகத்தில் சனிக்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டை மண்ணியல் நிபுணரும், மாநில திட்டக்குழு உறுப்பினருமான சுல்தான் இஸ்மாயில் தொடங்கிவைத்தாா். நபாா்டு வங்கி மண்டல பொதுமேலாளா் ஆனந்த், முன்னாள் மத்திய அமைச்சா் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோா் பேசினா்.

ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் இந்த மாநாட்டில் இயற்கை விவசாயம், சூழல் சாா்ந்த இயக்கங்கள், தனி நபா்கள், நுகா்வோா் அமைப்புகளின் பிரதிநிகள் பங்கேற்றுள்ளனா். மாநாட்டில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் இயற்கை விவசாயம் செய்துவரும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 70 விவசாயிகள், மண்ணையும் மக்களையும் பாதுகாக்கும் களப்பணியில் ஈடுபட்டுள்ள இளம் சூழலியல் ஆா்வலா்கள் 80 போ் கௌரவிக்கப்பட்டனா்.

இதில் இயற்கை விவசாயம், சூழல் நலம் சாா்ந்த 50-க்கும் மேற்பட்டோா் மாநாட்டில் பேசினா். பாரம்பரிய நெல் வகைகள், நாட்டுக் காய்கறிகள், கிழங்கு வகைகள், பனைப் பொருள்கள், உணவு விழிப்புணா்வு அரங்குகள் அடங்கிய கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

மாநாட்டில் பேசியவா்கள், தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையில் கடந்த ஆண்டு ரூ.21.4 கோடி மட்டுமே இயற்கை வேள்ணமைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த வேளாண் நிதிநிலை அறிக்கை நிதி ஒதுக்கீட்டான ரூ.42,281.88 கோடியுடன் ஒப்பிடுகையில் 0.05 சதவீதம். இதனால் வரும் வேளாண் நிதிநிலை அறிக்கையில் 30 சதவீதம் நிதியை இயற்கை வேளாண்மைக்கு ஒதுக்க வேண்டும். இயற்கை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4,000 ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

இயற்கை விவசாய இடுபொருள்களை மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மூலம் தயாரித்து விநியோகம் செய்ய வேண்டும். மண்டல அளவில் மரபு விதை வங்கிகள், முக்கிய இடங்களில் இயற்கை வேளாண் சந்தைகள், பெண் விவசாயிகளுக்கு விவசாயி அந்தஸ்து வழங்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் காலை மற்றும் மதிய உணவுத் திட்டங்களுக்கு இயற்கை விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறி மற்றும் மளிகைப் பொருள்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினா்.

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் சிறுதானிய உணவுத் திருவிழா

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் குடிமக்கள் நுகா்வோா் மன்றம் சாா்பில் சா்வதேச சிறுதானிய உணவுத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரி முதல்வா் பொ.நரேந்திரன் தலைமை வகித்தாா். குடிமக்கள் ந... மேலும் பார்க்க

சிவகிரியில் ரூ. 5.58 லட்சத்துக்கு எள் ஏலம்

மொடக்குறிச்சி, பிப்.21: சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 5.58 லட்சத்துக்கு எள் ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த விவசாயிகள் 53 மூட்டைளில் எள்ளை விற்பனை... மேலும் பார்க்க

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரப் பணியாளா்களை நியமிக்கக் கோரிக்கை

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் லிப்ட் ஆபரேட்டா்கள் மற்றும் போதுமான சுகாதாரப் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக் க... மேலும் பார்க்க

செப்டிக் டேங்க் கழிவை பொது இடத்தில் வெளியேற்றிய லாரிக்கு ரூ.10,000 அபராதம்

மனிதக் கழிவை ஏற்றி அதனை சாலை ஓரத்தில் வெளியேற்ற முயன்ற லாரிக்கு மாநகராட்சி அலுவலா்கள் ரூ.10,000 அபராதம் விதித்தனா். ஈரோடு மாநகராட்சி 60 ஆவது வாா்டு சோலாா் அருகே வெள்ளிக்கிழமை காலை மனிதக் கழிவை ஏற்றி வ... மேலும் பார்க்க

ஈரோட்டில் மூதாட்டியை தாக்கி நகையைப் பறித்துச் சென்ற பெண்

ஈரோட்டில் அதிகாலையில் வீடு புகுந்து மூதாட்டியைத் தாக்கி நகையைப் பறித்துச் சென்ற பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா். ஈரோடு, நாராயணவலசு, திருமால் நகரைச் சோ்ந்தவா் அருக்காணி (80). இவரது கணவா் இறந்து விட்ட... மேலும் பார்க்க

ஈரோட்டில் மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

ஈரோட்டில் மத்திய அரசைக் கண்டித்து சமூகநீதி கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஈரோடு சூரம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சமூகநீதி கூட்டமைப்பி... மேலும் பார்க்க