செய்திகள் :

இரவில் கழிப்பறைக்குச் செல்ல பெண்ணுக்கு அனுமதி மறுப்பு; பெட்ரோல் பங்கிற்கு ரூ.1,65,000 அபராதம்!

post image

பள்ளி ஆசிரியை ஜெயக்குமாரி காசர்கோடில் இருந்து பத்தனம்திட்டாவிற்கு நள்ளிரவில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது கோழிக்கோட்டின் பய்யோலியில் உள்ள பெட்ரோல் பங்கில் நின்று, பெட்ரோல் நிரப்பிய பிறகு கழிப்பறை வசதி கேட்டுள்ளார்.

ஆனால் அங்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் கழிப்பறை வசதி இல்லை என ஊழியர்கள் ஜெயக்குமாரியிடம் கூறியிருக்கிறார்கள், பின்னர் பெட்ரோல் பங்கின் மேலாளர் சாவியை வீட்டுக்கு எடுத்துச் சென்றதாக ஒப்புக்கொண்டனர்.

அடிப்படை வசதி மறுக்கப்பட்டதையடுத்து ஜெயக்குமாரி தான் சந்தித்த சிரமத்தை லேசாக எடுத்துக் கொள்ளவில்லை, உள்ளூர் போலீசாரிடம் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்து, அவர்கள் கழிப்பறையை வந்து திறந்துவிட்டுள்ளனர்.

பின்னர் பத்தனம்திட்டாவில் உள்ள மாவட்ட நுகர்வோர் இடர் தீர்வு ஆணையத்தை அணுகி, பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களாக இருந்தும் கழிப்பறைக்கு செல்ல அனுமதி மறுத்த பெட்ரோல் பங்க் மீது புகார் அளித்தார் ஜெயக்குமாரி.

அதன் பின்னர் இந்த சம்பவம் குறித்து ஆணையம் விசாரணை மேற்கொண்டது. பெட்ரோல் பங்க் வாடிக்கையாளர்களுக்கு கழிப்பறைகள் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை வழங்குவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி ஜெயக்குமாரிக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.

எதிர்த்தரப்பினர் 1,65,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தது, மனுதாரருக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் இழப்பீடு மற்றும் 15 ஆயிரம் ரூபாய் நீதிமன்ற செலவுகள் இதில் அடங்கும்.

`ஓசன்னா... தேவனே எம்மைக் கைவிடாதிரும்' - இயேசுவின் சிலுவைப் பாடுகளை ஏன் நினைவுக்கூற வேண்டும்?

மனித குல வரலாற்றில் மோசமான இரவுகளில் ஒன்று. அவரை அவர்கள் அறிவார்கள். அவர் ஆலயங்களிலும் பொது இடங்களிலும் பிரசங்கம் செய்பவர். மதம் வணிகமானபோது அதற்கு எதிராகக் குரல் எழுப்பி, 'கடவுளின் வீட்டை மீட்க வேண்ட... மேலும் பார்க்க

Infant trafficking: மகப்பேறு மருத்துவமனைகளில் குழந்தை கடத்தலை எப்படித் தடுக்கிறார்கள்?!

நாடு முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து பிறந்த குழந்தைகள் கடத்தப்படுவது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதைத் தடுப்பதற்காக, மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் திருடப்பட்டால், சம்பந்தப்பட்ட மருத்த... மேலும் பார்க்க

"தந்தை யார் என்று சொல்லக் கூடாது...” - வாடகை தாயின் வாயை அடைக்க பணம் கொடுக்கிறாரா எலான் மஸ்க்?

உலக பணக்காரரான எலான் மஸ்க், வாடகை தாய் மூலம் பல குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு, அதனை ரகசியமாக நிர்வகிக்க ஊக்கத்தொகைகள் கொடுப்பதாக சில அறிக்கைகள் கூறுகின்றன.டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்கின் தனி... மேலும் பார்க்க

UP : `வருங்கால மருமகனுடன் வீட்டைவிட்டு வெளியேறியது ஏன்?’ - விசாரணையில் பெண் சொன்னதென்ன?

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகரை சேர்ந்த சப்னா என்ற பெண்ணின் மகளுக்கு ராகுல் என்பவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு இருந்தது. திருமணத்திற்கு 10 நாட்கள் மட்டுமே இருந்த நிலையில், சப்னா தனது வருங்க... மேலும் பார்க்க

Scuba Diving: ``நீருக்குள் சந்தித்தோம், அதனால்..'' - நீருக்கடியில் திருமணம் செய்த காதல் தம்பதி!

வித்தியாசமான முறையில் திருமணத்தை நடத்த வேண்டும் என்று விரும்பும் சில மணமக்கள், தங்களது திருமணங்களை தனித்துவமாக நடத்த முற்படுகின்றனர். அப்படி ஒரு காதல் ஜோடி நீருக்கடியில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.ப... மேலும் பார்க்க

தாராவி: `ஆவணங்களை தாக்கல் செய்யாதவர்கள், சட்டவிரோத குடியிருப்பாளர்கள்' - NMDPL அறிவிப்பால் அதிர்ச்சி

தாராவி குடிசை மேம்பாட்டு ஆணையம்ஆசியாவில் அதிக குடிசையுள்ள பகுதியாக பார்க்கப்படும் மும்பை தாராவியில் உள்ள குடியிருப்புகளை இடித்து விட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை மாநில அரசு அதானி ந... மேலும் பார்க்க