செய்திகள் :

`இரவு 7 முதல் காலை 6 வரை வேலை செய்யலாம்..'- பெண்கள் நைட்ஷிஃப்ட் பணியாற்ற குஜராத்தில் சட்டத்திருத்தம்

post image

குஜராத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பெண்கள் இரவு நேரத்தில் பணியாற்ற ஏதுவாக தொழிற்சாலைகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான சட்டத்திருத்த மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள சட்டத்தின் படி பெண்கள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே பணியாற்ற முடியும். இதற்காக ஏற்கனவே உள்ள சட்டத்தில் மொத்தம் 6 திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன் படி பெண்கள் தகுந்த பாதுகாப்புடன் இரவு 7 மணியிலிருந்து காலை 6 மணி வரை பணியாற்றலாம். இது தவிர தொழிற்சாலைகளின் பணி நேரமும் 9 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதோடு தொழிற்சாலைகள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை 125 மணி நேரம் ஓவர்டைம் பணி கொடுக்கலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் இடைவெளி இல்லாமல் தொடர்ச்சியாக 6 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். வெறும் 3 நாட்கள் மட்டுமே நடந்த சட்டமன்றத்தின் மழை காலக்கூட்டத்தொடரின் இறுதி நாளில் மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ரஜபுத் இதனை தாக்கல் செய்து பேசுகையில்,'' மாநிலத்தில் பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்கவும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வாரத்தில் அதிகபட்சம் 48 மணிநேரம் பணியாற்றவேண்டும். இதன் மூலம் ஒருவர் 4 நாட்கள் தொடர்ந்து 12 மணி நேரம் பணியாற்றினால் அடுத்த 3 நாட்களை சம்பளத்துடன் கூடிய விடுமுறை எடுத்துக்கொள்ளலாம். இந்த சட்டத்திருத்தம் நிரந்தரம் கிடையாது. எந்த நேரம் வேண்டுமானாலும் அரசு இதனை திரும்ப பெற்றுக்கொள்ளும்'' என்று தெரிவித்தார். இம்மசோதா உடனே நிறைவேற்றப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சமீபத்தில் மகாராஷ்டிராவிலும் பணி நேரத்தை அதிகரித்து மாநில அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது.

சஞ்சய் கபூர் ₹30,000 கோடி சொத்து: உயில் குறித்து பிரியா சச்சிதேவ், கரிஷ்மா பிள்ளைகள் வாக்குவாதம்

சஞ்சய் கபூர் விவாகரத்துடெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்சய் கபூர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு லண்டனில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு மொத்தம் மூன்று மனைவிகள் இருந்தனர். அதில் ... மேலும் பார்க்க

சிவகாசி: '10 பைசா பிரியாணி' - Youtuber-ன் அறிவிப்பால் குவிந்த கூட்டம்; ஏமாற்றத்தோடு திரும்பிய சோகம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பிரபல யூடியூபருடைய உணவகத்தின் கிளை திறப்பு விழாவையொட்டி வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் 10 பைசா நாணயத்தை முதலில் கொண்டு வரும் 200 பேருக்கு சிக்கன் பிரியாணி, இரண்டு பி... மேலும் பார்க்க

The Conjuring: விற்பனைக்கு வரும் கான்ஜுரிங் படத்தில் இடம்பெற்றிருந்த வீடு - விவரம் என்ன?

2013 ஆம் ஆண்டு வெளியான தி கான்ஜுரிங் படத்தில் இடம்பெற்றிருந்த வீடு தற்போது ஏலத்திற்கு வருகிறது. ரோட் தீவில் உள்ள பர்ரில்வில்லே நகரத்தில் அமைந்துள்ள இந்த வீடு, அமானுஷ்ய வீடாக கருதப்பட்டு அதனை ஆய்வாளர்க... மேலும் பார்க்க

Nano Banana: இணையத்தில் வைரலாகும் ”நானோ பனானா” ட்ரெண்ட் - பின்னணி என்ன?

ஏஐ தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. அதன் ஒவ்வொரு அப்டேட்டும் வெளியாகி நொடிபொழுதில் சமூக ஊடகங்களில் வைரலாகிறது.தற்போது, ‘நானோ பனானா’ என்று அழைக்கப்படும் 3D டிஜிட்டல் புகைப்படங்களின் புதிய போக... மேலும் பார்க்க

Dosa: தோசை மீதான காதலால் கோடிகளில் லாபம் ஈட்டும் தம்பதியினர்; ஓர் அடடே ஸ்டோரி!

அதிக சம்பளம் வரும் வேலையை விட்டுவிட்டு தோசை மீதான காதலால் ஒரு புதிய முயற்சியைத் தொடங்க தம்பதியினர் முடிவெடுத்துள்ளனர்.அகில் ஐயர் மற்றும் ஸ்ரேயா நாயர் என்ற தம்பதியினர் புதுமண தம்பதிகளாக மும்பையில் தரை ... மேலும் பார்க்க

மரத்துக்கு ரூ.5 கோடி இழப்பீடு கேட்ட நபர்; மதிப்பு ரூ.11,000 என தெரிந்ததால் ரயில்வே அதிர்ச்சி

மகாராஷ்டிரா மாநிலத்தில் வார்தா மற்றும் நாந்தேட் இடையேயான ரயில்வே திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது யவத்மால் மாவட்டத்தில் உள்ள கார்ஷி என்ற கிராமத்தில் உள்ள கேசவ் ஷிண்டே என்ற விவசாயியின்... மேலும் பார்க்க