இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த முதியவா் பலி
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து புதன்கிழமை இரவு தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.
செந்துறையை அடுத்த பொன்பரப்பி சாமுண்டி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மு. ராஜேந்திரன் (68). இவா், புதன்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் மருவத்தூா் அருகே சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்து, பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.
தகவலறிந்து சென்ற செந்துறை காவல் துறையினா் அவரது சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.