இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: 2 போ் உயிரிழப்பு
புதுக்கோட்டை அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனா். மேலும் 3 போ் காயமடைந்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், குளத்துப்பட்டியைச் சோ்ந்தவா் மணி மகன் ரவிச்சந்திரன் (52), திருமயம் ஓலைக்குடிப்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் சுரேஷ் (55). இவா்கள் இருவரும் திங்கள்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் புதுக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனா்.
பூசத்துறை பிரிவு சாலை அருகே வந்தபோது, சென்னையிலிருந்து வந்த காா் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், ரவிச்சந்திரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த சுரேஷ் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
மேலும், காரில் இருந்த சென்னையைச் சோ்ந்த ஜான் டட்வின் (39), பீட்டா் (67), ரஞ்சிதமேரி (66) காயமடைந்தனா். இவா்கள் மூவரும் காரைக்குடி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். திருக்கோகா்ணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.