செய்திகள் :

`இருண்டகாலம்' - இந்திராகாந்தியை விமர்சித்த சசிதரூர்.. `இவர் எந்த கட்சி?' - கொந்தளித்த காங்கிரஸ்

post image

காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் நாடாளுமன்ற எம்.பி-யுமான சசிதரூர் சொந்த கட்சி தலைமையை தர்மசங்கடத்துக்கு ஆளாக்கும் வகையில் அவ்வப்போது கருத்துகளை தெரிவித்துவருகிறார்.

பிரதமர் மோடியை அடிக்கடி புகழ்ந்ததன் மூலம் காங்கிரஸ் டெல்லி தலைமையின் கோபத்துக்கு ஆளானார். கேரளா மாநில முதல்வர் வேட்பாளராக பெரும்பாலான மக்கள் விரும்பும் தலைவர் சசிதரூர் என ஒரு தனியார் நிறுவனம் நடத்திய சர்வே ரிப்போர்ட்டை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்ததன் மூலம் சில நாள்களுக்கு முன் காங்கிரஸ் மாநில தலைவர்களின் அதிருப்திக்கு ஆளானார்.

கேரள காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் வீ.டி.சதீசன்

இந்த நிலையில், எமெர்ஜென்சி குறித்து மலையாள நாளிதழ் தீபிகாவில் அவர் எழுதிய கட்டுரையில் இந்திராகாந்தி, சஞ்சய்காந்தி ஆகியோரை விமர்சித்துள்ளார். இது காங்கிரஸார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சசிதரூர் அந்த கட்டுரையில் கூறியுள்ளதாவது:

நம் நாட்டு வரலாற்றில் எமெர்ஜென்சி ஒரு இருண்டகாலம். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய அரசியலமைப்பு வார்த்தைகள் எமெர்ஜென்சி காலத்தில் கடும் சோதனைக்குள்ளாயின. சிறை கொடூரங்களும், விசாரணைகள் இல்லாத கொலைகளும் அரசை எதிர்க்க முயன்றவர்களுக்கு இருண்ட காலமாக மாறியது. மக்களை பயமுறுத்தியது எமெர்ஜென்சி. அந்த காலத்தில் இது எதுவுமே வெளியே தெரியவில்லை.

காங்கிரஸ் எம்.பி சசிதரூர்

ஒழுங்குபடுத்துவதற்காக நடவடிக்கைகள் சொல்லமுடியாத அட்டூழியங்களாக மாறின. நீதித்துறை, பத்திரிகைகள், எதிர்கட்சிகளும் தடைச்செய்யப்பட்டதாக இருந்தன.

இந்திராகாந்தியின் மகன் சஞ்சய் காந்தியின் கட்டாய குடும்ப கட்டுப்பாடு திட்டம் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். டெல்லி போன்ற நகரங்களில் சேரிப்பகுதிகளில் உள்ள வீடுகள் இரக்கமற்ற முறையில் இடிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் வீடற்றவர்களாக மாறினர். அவர்களின் பாதுகாப்பு குறித்து சிந்திக்கவே இல்லை. இதையடுத்து எமெர்ஜென்சி காலத்துக்கு பிறகு நடந்த தேர்தலில் இந்திரா காந்தியையும் அவரது கட்சியையும் வெளியேற்றி மக்கள் எதிர்ப்பை காட்டினர். இன்று இருப்பது ஜனநாயக இந்தியா என்ற அதிக நம்பிக்கை உள்ளது. இந்தியா வளர்ச்சியை எட்டியுள்ளது." என்று சசிதரூர் அந்த கட்டுரையில் கூறியிருந்தார்.

சசிதரூரின் கருத்துக்கு பதில்கூறவேண்டியது அகில இந்திய தலைமை என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டசபை எதிர்கட்சி தலைவர் வி.டி சதீசன் கூறியுள்ளார்.

சசிதரூரின் கட்டுரையை பார்த்தேன். அதுபற்றி எனக்கும் கருத்துகள் உள்ளன. ஆனால் அதை கூற விரும்பவில்லை எனவும் வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார்.

கே.முரளீதரன்

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கே.முரளீதரன் கூறுகையில், "காங்கிரஸ் கூட்டணி கேரளாவில் ஆட்சிக்கு வந்தால் கூட்டணியில் இருந்து ஒருவர் முதல்வர் ஆவார். சசிதரூர் எந்த கட்சியில் இருக்கிறார் என்பதை அவர்தான் முடிவுசெய்ய வேண்டும். முதல்வர் ஆவதற்கான சர்வேக்கள் நிறைய உள்ளன. யார் சர்வே நடத்தினாலும் கட்சி முடிவு செய்வதுதான் நடக்கும்" என்றார்.

Doctor Vikatan: பக்கவாதத்தில் பாதிக்கப்பட்ட வலது கை... மீண்டும் பழையநிலைக்குத் திரும்புமா?

Doctor Vikatan: என் வயது 63. எனக்கு 20 வருடங்களாக சர்க்கரைநோய் இருக்கிறது. 56 வயதில் பைபாஸ் சிகிச்சை செய்து கொண்டேன். அதற்கு ஒரு வருடத்துக்கு முன் 2 ஸ்டென்ட் வைக்கப்பட்டுள்ளது. 2023-ல் பக்கவாதம் வந்து... மேலும் பார்க்க

``நீ என்ன ரெளடியா.. உன் சட்டையை கழற்றாமல் விட மாட்டேன்'' - போலீஸை மிரட்டிய கோவை திமுக நிர்வாகி

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் அரசியல் கட்சிகள் இப்போதிருந்தே பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரசார சுற்றுப்ப... மேலும் பார்க்க

``139 தெருநாய்களுக்குக் கருத்தடை செய்ய ரூ.20 கோடியா?'' - அதிமுக குற்றச்சாட்டுக்கு தமிழக அரசு பதில்

139 தெருநாய்களுக்குக் கருத்தடைச் செய்ய திமுக அரசு ரூ.20 கோடி ஒதுக்கியதாக அதிமுகவின் ஐ.டி விங் எக்ஸ் பக்கத்தில் பதிவு என்று பதிவிடப்பட்டது. அதிமுக ஐ.டி விங்கின் முழு பதிவு இதோ... தெரு நாய்களிடமும் ஊழல்... மேலும் பார்க்க

``ஒரு‌முறை கடலில் விழுந்தபோது காப்பாற்றினார்; மற்ற 2 முறை எப்போது?'' - மல்லை சத்யாவுக்கு வைகோ கேள்வி

கடந்த சில மாதங்களுக்கு முன் துரை வைகோவுக்கும், கட்சியின் நிர்வாகத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டது.மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மூத்த தலைவர்... மேலும் பார்க்க

மதுரை: ``தடையை மீறி மேற்கு தொடர்ச்சி மலைக்கு மாட்டை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வேன்'' - சீமான்

`மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை' - நாதக மாநாடு"மாடு மேய்ப்பது அவமானம் அல்ல, வெகுமானம். திருமால், பெருமாள், கண்னன், நபிகள், இயேசு ஆகியோர் ஆடு மாடு மேய்த்தார்கள், கால்நடைகள் நம் உணர்வுடன் கலந்தவை" என்று ந... மேலும் பார்க்க

ஓசூர்: தெரு நாய் கடித்து உயிரிழந்த இளைஞர்.. ரேபீஸ் பாதிப்பால் துயரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகிலுள்ள குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எட்வின் பிரியன் (24). எம்பிஏ பட்டதாரியான இவரை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தெரு நாய் கடித்து உள்ளது. நாய் கடியை அலட்சியமாக எடுத்... மேலும் பார்க்க