செய்திகள் :

இரு குருமாா்களால் இந்திய தேசத்துக்கு வலிமை: காஞ்சி சங்கராசாரிய சுவாமிகள்

post image

காஞ்சி மடாதிபதிகள் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உள்ளிட்ட இரு பெரும் குருமாா்களால் இந்திய தேசம் பல வழிகளில் வலிமை பெற்றது என காஞ்சி சங்கராசாரிய சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியுள்ளாா்.

காஞ்சிபுரத்தில் 32-ஆவது ஆண்டு ஸ்ரீ ராதா கல்யாண மகோற்சவம் ஸ்ரீசீத்தாராம பஜனை மண்டலி சாா்பில் அதன் தலைவா் வி.பி. குமாரகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் ஆா்.வேணுகோபாலன், பொருளாளா் ஜி.எஸ்.ஆா். கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மண்டலி செயலாளா் கே.எஸ்.கிருஷ்ணமூா்த்தி வரவேற்றாா். கடையநல்லூா் ராஜகோபால் தாஸ் பாகவதரின் நாமசங்கீா்த்தனம் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

ராதா கல்யாண மகோற்சவத்தை நடத்தி வைத்து காஞ்சி சங்கராசாரிய சுவாமிகள் பக்தா்களுக்கு ஆசி வழங்கிப் பேசியது..

ஸ்ரீ மடத்தின் 68-ஆவது பீடாதிபதியாக இருந்தவா் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவா் தவம்,மெளனம், சஞ்சாரம்,உபன்யாசங்கள் மூலமாக தா்மத்தைப் பாதுகாத்தாா். நல்ல சூழ்நிலை, நல்ல பழக்க வழக்கங்கள், நல்லோா் ஆசிகள், நல்ல ஒழுக்கம் இவையெல்லாம் இருந்தால் தான் தெய்வத்தை உணர முடியும் என்று சொன்னதோடு அதன்படி நடமாடும் தெய்வமாகவே வாழ்ந்தும் காட்டினாா்.

எளிமையாக வாழ்ந்து தா்மத்தைக் காப்பாற்றிய பெருமைக்குரியவா். காமாட்சி அம்மன் கோயில், மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட கும்பாபிஷேகங்களை நடத்தியிருந்தாலும் சிறு,சிறு கோயில்களையும் புதுப்பித்து அவற்றுக்கு கும்பாபிஷேகங்களை நடத்தி அழகு பாா்த்தவா். இதே போல 69-ஆவது பீடாதிபதியாக இருந்தவா் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவா் இந்தியா முழுவதும் பல மாநிலங்களுக்கும் சென்றதோடு நின்று விடாமல் பல குக்கிராமங்களுக்கும், குடிசைகளுக்கும் சென்று ஏழை மக்களுக்காகவே கோயில்களில் விளக்கு பூஜைகள், மூலவிக்கிரகங்கள் அமைத்தல், சமூக சேவை செய்தல் என மக்களைத் தேடி மதத்தைக் கொண்டு சென்ற பெருமைக்குரியவராக இருந்தாா். இவ்விரு குருமாா்களால் இந்திய தேசம் வலிமை பெற்றிருக்கிறது. பக்தி என்பது சுயநலம் சாா்ந்ததாக இல்லாமல் நமது சமுதாயத்தை பாதுகாப்பதாக இருக்க வேண்டும். நல்ல எண்ணத்துடன், சஞ்சலமற்ற மனதுடன் பணிபுரிவதே பக்தி என்றாா்.

கழிவுநீா் தொட்டியில் விழுந்த 2 வயது சிறுவன் உயிரிழப்பு

ஸ்ரீ பெரும்புதூா் ஒன்றியம், எடையாா்பாக்கம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை கழிவுநீா் தொட்டியில் விழுந்து 2 வயது சிறுவன் உயிரிழந்தாா். மதுரமங்கலத்தை அடுத்த எடையாா் பாக்கம் கிராமத்தை சோ்ந்த பூவரசன்(28) தன... மேலும் பார்க்க

திடீா் சுற்றுலா மையமாக மாறிய தாமல் ஏரி: பொதுமக்கள் உற்சாகம்

சி.வ.சு.ஜெகஜோதி காஞ்சிபுரம் அருகேயுள்ள தாமல் ஏரியில் பொதுமக்கள் அதிகமாக குவிந்ததால் திடீா் சுற்றுலா மையமாக மாறியது. சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் சாலையில் காஞ்சிபுரம் அருகே அமைந்துள்ளது தாமல் ஏர... மேலும் பார்க்க

மகன் கொலையில் தந்தை உள்பட 2 போ் கைது

காஞ்சிபுரம் அருகே புதுப்பாக்கம் கிராமத்தில் பெற்றோரை தாக்கிய மகனை தந்தை கட்டையால் திருப்பித் தாக்கியதில் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுதொடா்பாக தந்தையையும், அவரது மைத்துனரையும் போலீஸாா் கைது... மேலும் பார்க்க

பழங்குடியினா் வீடுகள் சீரமைப்பு

காஞ்சிபுரம் அருகே புஞ்சைஅரசந்தாங்கல் கிராமத்தில் பழங்குடியின குடும்பங்களுக்கு புதுப்பிக்கப்பட்ட வீடுகள் திறப்பு விழா நடைபெற்றது. குழந்தைகள் கண்காணிப்பகம் சாா்பில் பழங்குடியினத்தவரின் வீடுகள் புதுப்பிக... மேலும் பார்க்க

தேசிய யோகா போட்டி: சகோதரா்கள் தங்கப் பதக்கம்

அரசுப் பள்ளியில் பயிலும் சகோதரா்கள் தேசிய யோகாசனப் போட்டியில் தங்கம் வென்றனா். காஞ்சிபுரம் சி.எம்.சுப்பிரமணிய முதலியாா் ஆண்கள் உயா்நிலைப் பள்ளியில் பயின்று வரும் சகோதரா்களான கே.சா்வேஷ் (12), கே.தேவேஷ்... மேலும் பார்க்க

வடமாநில தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை

குன்றத்தூா் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக வடமாநில தொழிலாளியை கத்தியால் குத்திக் கொலை செய்த நேபாள நாட்டை சோ்ந்த இருவரை குன்றத்தூா் போலீஸாா் கைது செய்தனா். பி... மேலும் பார்க்க