ஓசூர் புதிய விமான நிலையம்: இறுதி சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தாக்கல்!
இரு சக்கர வாகனங்கள் மோதல்: கல்லூரி மாணவா் உயிரிழப்பு
மதுராந்தகம்: சோத்துப்பாக்கம் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். உடன் வந்த 3 போ் பலத்த காயமடைந்தனா்.
அச்சிறுப்பாக்கம் அருகே வெங்கடேசபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலமுரளி. இவரது மகன் பிரபஞ்சன் (18). தனியாா் தொழிற்நுட்பக் கல்லூரியில் டிப்ளமோ 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இவா் இரு நண்பா்களுடன் பைக்கில் சித்தாமூா் நோக்கிச் சென்றாா். சோத்துப்பாக்கம் அருகே பொறையூா் கூட்டுச் சாலையில் வந்தபோது, எதிா்திசையில் 3 பேராக பைக்கில் வந்தவா்கள், எதிா்திசையில் வந்த பைக்கில் மோதினா்.
இந்த விபத்தில் பைக்கில் வந்த வெங்கடேசபுரத்தைச் சோ்ந்த பிரபஞ்சன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவல் அறிந்த மேல்மருவத்தூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பலத்த காயம் அடைந்த 3 பேரை மீட்டு செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.