காட்சிப்படுத்தப்பட்ட பெண் புகைப்படக் கலைஞர்களின் படைப்புகள்! - Chennai photo bie...
இறக்கை அழுகல் நோயால் கோழிகள் இறக்க வாய்ப்பு
நாமக்கல் மண்டலத்தில் இறக்கை அழுகல், ரத்தசோகை நோயால் கோழிகள் இறக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த வார வானிலையைப் பொருத்தமட்டில், பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 86, 66.2 என்ற அளவிலேயே காணப்பட்டது. மாவட்டத்தில் மழை எங்கும் பதிவாகவில்லை. இனிவரும் ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் பெரும்பாலும் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் பல இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. பகல் வெப்பம் 87.8-க்கு மிகாமலும், இரவு வெப்பம் 73.4-க்கு மிகாமலும் இருக்கக் கூடும். கிழக்கு மற்றும் வடக்கு திசையில் இருந்து மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
சிறப்பு ஆலோசனை: கோழியின நோய் ஆய்வகத்தில் கடந்த வாரம் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில், பெரும்பாலும் இறக்கை அழுகல் மற்றும் ரத்தசோகை நோய் பாதிப்பால் இறந்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே, பண்ணையாளா்கள் கோழிக்கு அளிக்கும் தீவனத்தில் நுண்ணுயிா்க் கிருமிகளான கிளாஸ்டிரியம், ஸ்டெப்லோகாக்கஸ் மற்றும் ஈக்கோலை ஆகியவற்றின் தாக்கம் உள்ளதா என்பதை பரிசோதனை செய்து, அதற்கேற்ப தீவன மேலாண்மை முறைகளை கையாள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.