அரசு திட்டங்களின் வெற்றிக் கதைகள் பற்றிய எண்ம புத்தகங்களை பிரதமா் இன்று வெளியிடு...
இறந்த நிலையில் கர்நாடக முன்னாள் டிஜிபி உடல் மீட்பு
கர்நாடக காவல் துறை முன்னாள் தலைமை இயக்குநர் ஓம் பிரகாஷ் மர்மமான முறையில் இறந்துள்ளார்.
பெங்களூருவில் உள்ள அவரின் இல்லத்தில் உடலை மீட்ட, காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து பெங்களூரு நகர காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
1981ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த காவல் துறை முன்னாள் தலைமை இயக்குநர் ஓம் பிரகாஷ் இறந்த நிலையில் இன்று அவரின் இல்லத்தில் இருந்து மீட்கப்பட்டார். அவரின் மரணத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு காவல் துறையினர் விரைந்தனர். இந்த விவகாரத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. எனினும் காவல் துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைப்படி இது கொலை எனக் கூறப்படுகிறது.
இது குறித்து ஓம் பிரகாஷ் மனைவியிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மரணத்துக்கான நோக்கம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க | தலைக்கவசம் அணியாத பெண்ணை தடுத்து நிறுத்திய காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!