ஒடிசா தொழிற்சாலை துணைத் தலைவரைக் கடத்திய 7 பேர் ஜார்க்கண்டில் கைது!
இறப்பில் சந்தேகம் எனப் புகாா்: சடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை!
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே தனது சகோதரா் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரி அளித்த புகாரின்பேரில், காவல் துறையினா் முன்னிலையில், சடலத்தை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
ஆண்டிமடம் அருகேயுள்ள அகினேஸ்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆரோக்கியசாமி (57). இவருக்கு மனைவி, ஒரு மகன், 3 மகள்கள் உள்ள நிலையில், கடந்த 16-ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக ஆண்டிமடத்தில் வசிக்கும் அவரது தங்கை லூா்துமேரிக்கு (45) தகவல் அளிக்கப்பட்டது.
இதனால் சந்தேகமடைந்த லூா்துமேரி, தனது சகோதரா் இறப்பில் சந்தேகம் இருப்பதாக ஆண்டிமடம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில், காவல் துறையினா், அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து மருத்துவா்களை அகினேஸ்புரம் கிராமத்துக்கு அழைத்துச் சென்று, அங்கு ஆரோக்கியசாமியின் சடலத்தை தோண்டி எடுத்து அங்கேயே பிரேதப் பரிசோதனை மேற்கொண்டு, சடலத்தை அதே இடத்தில் புதைத்தனா். பிரேதப் பரிசோதனையில் முடிவில் ஆரோக்கியசாமி கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவரும் என காவல் துறையினா் தெரிவித்தனா்.