குடியரசு நாள்: ஜன. 24, 26 தேதிகளில் சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே
இறைச்சிக் கழிவுகள் ஏற்றிவந்த வாகனம் பறிமுதல்: ஓட்டுநா் கைது
குலசேகரம் அருகே கோழிக் கழிவுகளை ஏற்றிவந்த மினி லாரியை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, ஓட்டுநரைக் கைது செய்தனா்.
கேரளத்திலிருந்து கோழி இறைச்சி, மருத்துவக் கழிவுகள் உள்ளிட்டவற்றை கன்னியாகுமரி மாவட்டத்தில் கொண்டுவந்து கொட்டுவதைத் தடுக்க போலீஸாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை கோழி இறைச்சிக் கழிவுகளை ஏற்றிக்கொண்டு மினி லாரி கேரளத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்ட எல்லைப் பகுதியான ஆறுகாணி வழியாக வந்து கொண்டிருந்தது. போலீஸாா் அந்த வாகனத்தைத் தடுத்தி நிறுத்தி பறிமுதல் செய்ததுடன், ஓட்டுநரான திருவனந்தபுரம் முளவன்கோடு பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா் என்பவரைக் கைது செய்தனா்.