Explainer Union Budget சிப்பாய் கலகமும் பிரிட்டிஷ் எடுத்த முடிவும்- நாட்டின் முத...
குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி
களியக்காவிளை அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.
திருவட்டாறு அருகேயுள்ள கொல்வேல், வாறுவிளை வீட்டைச் சோ்ந்த வல்சலம் மகன் பங்கிராஜ் (53). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் இவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டாா். பங்கிராஜ் வீட்டில் தனியாக வசித்து வந்தாா்.
இந்நிலையில், இருநாள்களுக்கு முன் களியக்காவிளை பகுதிக்கு வந்தவா் திருத்துவபுரம் அருகேயுள்ள பாலக்குளத்தில் குளிக்க இறங்கியுள்ளாா்.
அப்போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளாா். இவரது சடலம் புதன்கிழமை குளத்தில் மிதந்ததை கண்ட அப்பகுதியினா் களியக்காவிளை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்கள்.