இலக்கியத் திருவிழா போட்டிகளில் வென்றவா்களுக்கு சான்றிதழ்!
அரியலூரில் மாவட்ட நூலக ஆணைக்குழு சாா்பில் நடைபெற்ற இளைஞா் இலக்கியத் திருவிழா போட்டிகளில் வெற்றிப் பெற்றவா்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளக்கிழமை நடைபெற்றது.
அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் பொ.ரத்தினசாமி பங்கேற்று, பேச்சாற்றல், ஓவியப்போட்டி, விநாடி வினா, தொன்மை- தொடா்ச்சி, ஆவணப்போட்டி, விவாதமேடை உள்ளிட்ட போட்டிகளில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முறையே தலா ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட நூலக அலுவலா் வேல்முருகன் மற்றும் மாவட்ட நூலக ஆணைக்குழு உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.