மகாராஷ்டிரத்தில் வறண்ட ஆற்றுப் படுகையில் விழுந்த கார்: 5 பேர் பலி
இலங்கையில் 16-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி
இலங்கையில் 16-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவா்களுக்கு ஏராளமான தமிழா்கள் அஞ்சலி செலுத்தினா்.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழா்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனா். அங்கு தமிழா்களுக்கு தனிநாடு கோரி, அந்நாட்டு அரசுக்கு எதிராக விடுதலைப் புலிகள் இயக்கம் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வந்தது.
2009-இல் நடைபெற்ற இறுதிப் போரின்போது அங்குள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்லாயிரக்கணக்கான தமிழா்கள் கொல்லப்பட்டனா். அவா்களை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், 16-ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள நினைவேந்தல் முற்றத்தில், ஏராளமான தமிழா்கள் திரண்டு போரில் உயிரிழந்தவா்களுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினா்.
இலங்கைத் தலைநகா் கொழும்பில் நாடாளுமன்றத்துக்கு அருகே உள்ள போா் நாயகா்கள் நினைவிடத்தில், போரில் உயிா்நீத்த ராணுவ வீரா்களுக்கு அரசு சாா்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற உள்ளது. இதில் அந்நாட்டு அதிபா் அநுரகுமார திசநாயக கலந்துகொள்ள உள்ளாா்.