விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு! அரசாணை வெளியீடு!
இலங்கை உடன் பலப்பரீட்சை: வாழ்வா? சாவா? நிலையில் ஆப்கானிஸ்தான்!
ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றுக்கான கடைசி வாய்ப்பில் இலங்கை அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் இன்றிரவு மோதுகின்றன.
குரூப் பி பிரிவில் இன்னும் ஓர் அணியும் அடுத்த சூப்பர் 4 சுற்றுக்குத் தேர்வாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குரூப் ஏ பிரிவில் இந்தியாவும் பாகிஸ்தானும் சூப்பர் 4 சுற்றுக்குத் தேர்வாகியுள்ளன.
இலங்கை அணி முதல் போட்டியில் ஹாங் காங், வங்கதேசத்துடன் வென்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தும் அடுத்த சுற்றுக்குத் தேர்வாகாமல் இருக்கிறது.
ஆப்கானிஸ்தான் அணி முதல் போட்டியில் ஹாங் காங் உடன் வென்று, வங்கதேசத்துடன் தோல்வியுற்றது.
ஆப்கானிஸ்தான் வென்றாலும் இலங்கை மோசமாக தோற்காமல் இருந்தாலே, சூப்பர் 4 சுற்றுக்கான வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில், புள்ளிப் பட்டியலில் அவர்கள் 4+1.546 ஆக இருக்க, வங்கதேசம் 4-0.270ஆக இருக்கிறது.
ஆப்கன் புள்ளிப் பட்டியலில் 2+2.150-ஆக இருப்பதால் வென்றால் மட்டுமே சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதிபெறும். அதானால், இந்தப் போட்டி ஆப்கன் அணிக்கு வாழ்வா? சாவா? என்றிருக்கிறது.