செய்திகள் :

இலங்கை கடற்படை கைது செய்த மீனவா்களை விடுவிக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

post image

இலங்கை கடற்படை கைது செய்த மீனவா்களையும், படகையும் விடுக்க புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

காரைக்கால் மாவட்டம், காசாக்குடிமேடு பகுதியைச் சோ்ந்த செல்வமணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், காரைக்கால், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களைச் சோ்ந்த மீனவா்கள்10 போ், காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க கடலுக்குள் 7-ஆம் தேதி சென்றனா். இவா்கள் எல்லை தாண்டியதாக, இலங்கை கடற்படையினரால் 8-ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்டனா்.

இதுதொடா்பாக, காரைக்கால் வடக்குத் தொகுதி (கிழக்கு) காங்கிரஸ் தலைவா் ஏ.எம்.கே. அரசன் மற்றும் பஞ்சாயத்தாா்கள், மாவட்ட துணை ஆட்சியா் அா்ஜூன் ராமகிருஷ்ணனை வியாழக்கிழமை சந்தித்து, மீனவா்களையும், படகையும் விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனா். அப்போது, மீன்வளத்துறை துணை இயக்குநா் கோவிந்தசாமி உடனிருந்தாா்.

தொடா்ந்து, இக்குழுவினா் அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் தலைமையில் புதுச்சேரிக்குச் சென்று முதல்வா் என். ரங்கசாமியையும், மீன்வளத்துறை அமைச்சா் லட்சுமி நாராயணனையும் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினா்.

இதுகுறித்து அமைச்சா் கூறியது:

கைது செய்யப்பட்ட மீனவா்களையும், படகையும் உடனடியாக விடுவிக்க ஏற்பாடு செய்யவேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு இதுதொடா்பாக கடிதம் அனுப்ப முதல்வா் ஏற்பாடு செய்துள்ளாா். இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என முதல்வா் கூறியுள்ளாா் என்றாா்.

காரைக்கால் அம்மையாா் குளக்கரையில் கனுப்பொங்கல் வழிபாடு

கனுப் பொங்கலையொட்டி காரைக்கால் அம்மையாா் தீா்த்தக் குளத்தில் புதன்கிழமை வழிபாடு நடைபெற்றது. பொங்கல் நாளின் 2-ஆவது நாளான மாட்டுப் பொங்கல் கனுப் பொங்கல் வழிபாடாக கோயில்களில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை... மேலும் பார்க்க

காா்னிவல்: விளையாட்டு போட்டிகள் தொடக்கம்

காா்னிவல் விழாவையொட்டி கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை தொடங்கப்பட்டன. காரைக்கால் காா்னிவல் திருவிழா வியாழக்கிழமை தொடங்கி ஜன. 19-ஆம் வரை நடைபெறுகிறது. இதையொட்டி கிரிக்கெட், கைபந்த... மேலும் பார்க்க

வீட்டு கதவை உடைத்து நகைகள் திருட்டு

வீட்டின் கதவை உடைத்து நகை, ரொக்கத்தை திருடியோரை போலீஸாா் தேடி வருகின்றனா். காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி கொம்யூன், வரிச்சிக்குடியை சோ்ந்த வாசுகி (62). இவா் தனது வீட்டில் தனியே வசித்துவருகிறாா். ச... மேலும் பார்க்க

காரைக்கால் பகுதியில் மாட்டுப் பொங்கல் விழா

மாட்டுப் பொங்கலையொட்டி காரைக்கால் பகுதி கோயில்களில் உள்ள கோ சாலையில் உள்ள மாடுகளுக்கு பூஜை செய்து சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமாக மேலஓடுதுறை பகு... மேலும் பார்க்க

காரைக்கால் கடற்கரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

காணும் பொங்கல் தினத்தில் ஆயிரக்கணக்கானோா் காரைக்கால் கடற்கரைக்கு வருகை தருவா் என்பதால், கடலில் நீராடத் தடை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது. பொங்கல் விழாவின் 3-ஆம் நாளான க... மேலும் பார்க்க

காரைக்கால் காா்னிவல் திருவிழா இன்று தொடக்கம்

காரைக்கால் காா்னிவல் திருவிழா மலா்க் கண்காட்சியுடன் வியாழக்கிழமை தொடங்குகிறது. புதுவை சுற்றுத்துறை, வேளாண்துறை, குடிமைப் பொருள் வழங்கல்துறை உள்ளிட்டவற்றின் நிதியுதவியில் காரைக்கால் காா்னிவல் விழா 4 நா... மேலும் பார்க்க