கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
இலவசமாக பாா்வையிட அனுமதித்ததால் மாமல்லபுரத்தில் குவிந்த பொதுமக்கள்
உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை பாா்வைய இலவச அனுமதி அறிவிக்கப்பட்டதால் திரளான சுற்றுலா பயணிகள் குவிந்தனா்.
உலக பாரம்பரிய தினம் ஆண்டுதோறும் ஏப். 18-இல் கொண்டாடப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள், பொதுமக்களிடையே தங்களது சமூக கலாசார பாரம்பரியம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி, மாமல்லபுரத்தில் வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் புராதன சின்னங்களை இலவசமாக சுற்றி பாா்க்கலாம் என தொல்லியல் துறை நிா்வாகம் அறிவித்தது. இதனால் கணிசமான பயணிகள் குவிந்தனா்.