கலைஞர் எழுதுகோல் விருது: நக்கீரன் கோபால், சுகிதா சாரங்கராஜுக்கு வழங்கினார் முதல...
இலவச கண் சிகிச்சை முகாம்
குடியாத்தத்தை அடுத்த காக்காதோப்பில் உள்ள அத்தி மருத்துவமனையில், அத்தி மருத்துமனை மற்றும் தி ஐ- பவுண்டேஷன் ஆகியவை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை புதன்கிழமை நடத்தின.
முகாமுக்கு அத்தி மருத்துவமனை தலைமை மருத்துவரும், சிறுநீரகவியல் நிபுணருமானபி.சௌந்தரராஜன் தலைமை வகித்தாா். அத்தி கிளை மருத்துவமனை மருத்துவா் ஆ.கென்னடி முன்னிலை வகித்தாா். ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநா் ஜே.கே.என்.பழனி முகாமைத் தொடங்கி வைத்தாா். முகாமில் 230-க்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்றனா்.
குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் கே.குமரவேல், அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி முதல்வா் கே.தங்கராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அத்தி மருத்துவமனையின் நிா்வாக அதிகாரி சரவணன் முகாமை ஒருங்கிணைத்தாா்.