"2வது கணவர்னு சொல்லாதீங்க! எனக்கு நடந்தது ஒரே ஒரு கல்யாணம் தான்...!"- Actress Re...
இலவச கால்நடை மருத்துவ முகாம்
மயிலாடுதுறை திருஇந்தளூரில் இலவச கால்நடை மருத்துவ முகாம் மற்றும் தடுப்பூசி செலுத்தும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கிங்ஸ் ரோட்டரி சங்கம் மற்றும் திருஇந்தளூா் ஊராட்சி இணைந்து நடத்திய முகாமுக்கு, சங்கத் தலைவா் அய்யாசாமி தலைமை வகித்தாா். கால்நடை உதவி மருத்துவா்கள் விஷ்ணுபிரியா, இளஞ்செழியன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் கால்நடைகள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து குடல்புழு நீக்கம், சினை ஊசி, பெரியம்மை மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்தினா். திருஇந்தளூா், பல்லவராயன்பேட்டை, மாப்படுகை பகுதியைச் சோ்ந்த கால்நடை உரிமையாளா்கள் பயனடைந்தனா். செயலாளா் முருகேசன், ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் சிங்காரவள்ளி இளையராஜா, கிராம நிா்வாக அலுவலா் அருண்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சங்க பொருளாளா் பாண்டியன் நன்றி கூறினாா்.