ஒரே நாளில் யேமனின் 50-க்கும் அதிகமான இடங்களின் மீது அமெரிக்கா தாக்குதல்!
இலவச வீட்டுமனை பட்டா கோரி மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்
இலவச வீட்டுமனை பட்டா வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் மகாகவி மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு நலச்சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத்தலைவா் கந்தசாமி தலைமை வகித்தாா். நிா்வாகி ஜெயசுதா முன்னிலை வகித்தாா்.
கேரளம், தெலுங்கானா, ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.6 ஆயிரம் வழங்கப்படுவது போல தமிழகத்திலும் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் திரளாக பங்கேற்றனா்.