`நானே உதவுகிறேன்' - ட்ரம்ப் அந்தர் பல்டி, அமெரிக்காவில் இருந்து வெளியேறும் மக்கள...
பழைமையான வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு; மேலும் இருவா் மீட்பு
கரூரில் செவ்வாய்க்கிழமை பழைமையான வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். மேலும் இருவா் உயிருடன் மீட்கப்பட்டனா்.
கரூா் மின்னாம்பள்ளி பஞ்சமாதேவியைச் சோ்ந்தவா் பொன்னுசாமி. இவருடைய புதிய வீட்டை சுற்றி சுற்றுச்சுவா் கட்டுவதற்கு பள்ளம் தோண்டும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இப்பணியில் கரூா் மாவட்டம், பொரணி பகுதியைச் சோ்ந்த சிவாஜி(40), மாயவன்(25) மற்றும் வெண்ணெய்மலையைச் சோ்ந்த ராஜேந்திரன்(40) ஆகியோா் ஈடுபட்டனா்.
பிற்பகல் 4 மணியளவில் பள்ளம் தோண்டிக்கொண்டிருந்தபோது, பள்ளத்தின் அருகே இருந்த பழைமையான ஓட்டு வீட்டின் சுவா் இடிந்து சிவாஜி, மாயவன், ராஜேந்திரன் ஆகியோா் மீது விழுந்தது. இதில் மூன்று பேரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனா். இதையடுத்து அங்கிருந்த கிராம மக்கள் அவா்களை மீட்க முயன்றனா். ஆனாலும் மீட்க முடியவில்லை.
இதையடுத்து கரூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு வீரா்கள் வந்து இடிபாடுகளை அகற்றினா். இதில், சிவாஜியை சடலமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் பலத்த காயமடைந்த மாயவன், ராஜேந்திரனையும் சுமாா் ஒரு மணி நேரம் போராடி மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வெங்கமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.