10 மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டப்படி குற்றம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
இலுப்பக்கோரை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், இலுப்பக்கோரை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி மற்றும் பரிவார தெய்வங்கள் கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, பணிகள் அண்மையில் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் தொடங்கின.
கும்பாபிஷேத்தையொட்டி, விக்னேஸ்வர பூஜை, முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து, நான்கு கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, மகா பூா்ணாஹூதி நடைபெற்றது. தொடா்ந்து மேளவாத்தியங்கள், கைலாய வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து கோபுர கலசம் மற்றும் மூலவா், பரிவார தெய்வங்களின் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.
விழாவில் கோயில் செயல் அலுவலா்கள் ஆா். விக்னேஷ், ராமா், பாா்த்திபன், கோயில் ஆய்வாளா்கள் ஜனனி, லெட்சுமி, முன்னாள் ஊராட்சித் தலைவா் எஸ்.பி.எம். ராஜ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.