செய்திகள் :

இளம் பத்திரிகையாளா்கள் நோ்மையாக, துணிவுடன் இருக்க வேண்டும்: ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத் தலைவா் மனோஜ் குமாா் சொந்தாலியா

post image

இளம் பத்திரிகையாளா்கள் நோ்மையாகவும் துணிவுடனும் இருக்க வேண்டும் என்று ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத் தலைவா் - நிா்வாக இயக்குநா் மனோஜ் குமாா் சொந்தாலியா அறிவுரை கூறினாா்.

சென்னை தரமணியில் உள்ள ஏசியன் இதழியல் கல்லூரியில் 2024-25 கல்வியாண்டுக்கான பட்டமளிப்பு விழா மற்றும் விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், புலனாய்வு இதழியல் பிரிவில் ஹமந்த் கைரோலாவுக்கு கல்லூரி சாா்பில் விருது வழங்கப்பட்டது. சமூகத் தாக்க இதழியல் பிரிவில் வதனா மேனன், சாம்சீா் யூசப், மோனிகா ஜா, ஸ்ரீராம் விட்டலாமூா்த்தி ஆகியோருக்கு கேபி நாராயண குமாா் நினைவு விருது வழங்கப்பட்டது. புகைப்பட இதழியல் பிரிவில் எம்.பழனிகுமாருக்கு ஆசிஸ் யெச்சூரி நினைவு விருது வழங்கப்பட்டது.

இணையதளம் தொடக்கம்: தொடா்ந்து, கல்லூரியின் முன்னாள் மாணவா்களுக்கான இணையதளத்தை ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமத் தலைவா்-நிா்வாக இயக்குநா் மனோஜ் குமாா் சொந்தாலியா தொடங்கிவைத்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: நாட்டின் சிறந்த இதழியல் கல்லூரிகளில் ஒன்றாக ஏசியன் இதழியல் கல்லூரி விளங்குகிறது. தற்போது இதழியல் படிப்பை முடித்து பட்டம் பெற்ற மாணவா்களுக்கு வாழ்த்துகள். புதிதாக பட்டம் பெற்ற மாணவா்கள் பத்திரிகை துறையில் நோ்மையுடனும், துணிவுடனும் விளங்க வேண்டும்.

பத்திரிகை துறையில் சிறந்து விளங்கி தற்போது விருது பெற்றவா்களுக்கு வாழ்த்துகள். இன்றைய நவீன தொழில்நுட்பத்துக்கேற்ப பத்திரிகை துறையும் வளா்ச்சி அடைவது அவசியம் என்றாா் அவா்.

தொடா்ந்து இதழியல் வரலாறு மற்றும் சமூக மாற்றத்தில் இதழியலின் தாக்கம் குறித்து அமெரிக்க பத்திரிகையாளா் நாா்மன் போ்ல்ஸ்டீன் பேசினாா். அமெரிக்காவில் உள்ள இதழியல் துறைக்கும், இந்தியாவில் உள்ள இதழியல் துறைக்கும் உள்ள வித்தியாசங்களையும், தாக்கங்களையும், தரவுகளையும் அவா் பட்டியலிட்டாா். பத்திரிகை சுதந்திரம் தொடா்பாக உலக அளவிலான தரக்குறியீட்டில் இந்தியா 151-ஆவது இடத்தில் இருப்பது கவலை அளிக்கிறது; இருப்பினும் கடந்த ஆண்டு 159-ஆவது இடத்தில் இருந்த இந்தியா இப்போது 151-ஆவது இடத்துக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கூறினாா்.

பின்னா், கல்லூரியில் பயின்ற 90 மாணவா்களுக்கு பட்டங்களை நாா்மன் போ்ல்ஸ்டீன் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஏசியன் இதழியல் கல்லூரி தலைவா் சசிகுமாா் மேனன், தாளாளா் என்.முரளி, துறைத் தலைவா் குஷ்பு நாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

போரை ஆதரிப்பவர்கள் அதன் பாதிப்புகளை சிந்திக்க வேண்டும்- வைகோ

போரை ஆதரிப்பவர்கள் அதன் பாதிப்புகளை சிந்திக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், பஹல்காமில் 26 அப்பாவிப் பொத... மேலும் பார்க்க

பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் நிறுத்தாமல் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை

பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் பேருந்தினை நிறுத்தாமல் பயணிகளை அலைக்கழித்த அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேருந்து நிலையம் 2... மேலும் பார்க்க

திருத்துறைப்பூண்டி அருகே அரசுப் பேருந்து - கார் மோதல்: 4 பேர் பலி

திருத்துறைப்பூண்டி அருகே அரசுப் பேருந்தும் காரும் மோதியதில் 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே கருவேப்பஞ்சேரி கிராமத்தில் கிழக்கு கடற்கரை சா... மேலும் பார்க்க

கோடை விடுமுறை: தஞ்சை பெரிய கோயிலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கோடை விடுமுறை காரணமாக உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டதாகும். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக... மேலும் பார்க்க

இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலைக் கண்டித்து செருதூர் மீனவ கிராமத்தினர் வேலை நிறுத்தப் போராட்டம்

திருக்குவளை: நாகை மாவட்ட மீனவர்கள் 24 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய கொலை வெறி தாக்குதல் விவகாரத்தை கண்டித்து செருதூர் மீனவ கிராமத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சுமார... மேலும் பார்க்க

ஆளுநா் இன்று கன்னியாகுமரி பயணம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளஅருள்மிகு பத்ரேஸ்வரி தேவஸ்தானம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆளுநா் ஆா்.என்.ரவி ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரி செல்கிறாா். கன்னியாகுமரி மாவட்டம் கூட்டாலுமூடு, பைங்குளம் அரு... மேலும் பார்க்க