செய்திகள் :

இளம் வயதினரிடையே அதிகரிக்கும் நுரையீரல் பாதிப்பு: நிபுணா்கள் எச்சரிக்கை

post image

இந்தியாவில் இளம் வயதினரிடையே நுரையீரல் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக மருத்துவத் துறை நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.

ஆண்டுதோறும் இந்தியாவில் புதிதாக 81,700 நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகி வருவதை சுட்டிக்காட்டி அவா்கள் இவ்வாறு தெரிவித்தனா்.

நுரையீரல் புற்றுநோய், காசநோய், மூச்சுத்திணறல் போன்ற இதயம் சாா்ந்த பிரச்னைகள் வயது முதிா்வின்போது ஏற்படும் நோய்களாக முன்பு கருதப்பட்டு வந்தன. தற்போது இவை இளம் வயதினரை அதிகம் பாதிப்பதால் மக்கள்தொகைக்கும் பொருளாதாரத்துக்கும் பேரழிவை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

சுவாச மருந்து, நுரையீரல் பாதிப்புக்கான சிகிச்சை மற்றும் தூக்கமின்மைக்கான 8-ஆவது தேசிய மாநாடு புது தில்லியில் அண்மையில் நடைபெற்றது.

அதில் சமையலறை மற்றும் வீட்டினுள் இருந்து வெளியேறும் புகையானது பெண்களிடையே நுரையீரல் புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துவதில் முக்கிய காரணியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் உலக அளவில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் உயிரிழப்பில் நிமோனியா பாதிப்பு 14 சதவீதமாக உள்ளதாகவும் மாசடைந்த காற்றால் குழந்தைகளின் இளம் வயது நோய்எதிா்ப்பு சக்தி குறைவதாகவும் கூறப்பட்டது.

மாநாட்டை தொடங்கிவைத்து சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநா் மருத்துவா் வத்சலா அகா்வால் பேசியதாவது: தூய்மையான காற்று என்பது ஆடம்பரமல்ல; அது நம் அடிப்படை உரிமை. இந்திய சுகாதார கொள்கையில் சுவாச சுகாதாரத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இந்தியாவில் இளம் வயதினரிடையே நுரையீரல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

இளம் தலைமுறையினரின் நுரையீரலை பாதுகாப்பதால் தேசத்தின் சமூக அமைப்பையும் பொருளாதாரத்தையும் பாதுகாக்க முடியும்.

மாசடைந்த காற்று நமது நிகழ்காலம் மற்றும் வருங்காலத்தை சீரழிப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்றாா்.

நாடு முழுவதும் இருந்து மருத்துவ மாணவா்கள், நிபுணா்கள் மற்றும் வெளிநாட்டு நிபுணா்கள் என 1,200 போ் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனா்.

’கோ பேக் ராகுல்’... கான்வாயை மறித்து உ.பி. அமைச்சர் போராட்டம்!

உத்தரப் பிரதேசத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பாதுகாப்பு வாகனங்களை மறித்து அந்த மாநில அமைச்சர் தினேஷ் பிரதாப் போராட்டம் நடத்தினார்.காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் த... மேலும் பார்க்க

நேபாளத்தில் வன்முறை: ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!

நேபாளத்தில் வெடித்துள்ள கலவரத்தைத் தொடர்ந்து, அந்நாட்டு தலைநகரான காத்மாண்டு இடையிலான அனைத்து ஏர் இந்தியா விமானங்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.நேபாள அரசுக்கு எதிராக, ஜென்-ஸி என அழைக்கப்படும் ... மேலும் பார்க்க

மோடியைப் போன்ற தலைவர் வேண்டும்: நேபாள இளைஞரின் விடியோவை பகிர்ந்த பாஜக

நேபாளத்தில் ஆளுங்கட்சிக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்திருக்கும் இளைஞர்கள், மோடியைப் போன்ற தலைவர் வேண்டும் என்று கூறும் விடியோவை பாஜக பகிர்ந்துள்ளது. மேலும் பார்க்க

ஐஸ்வர்யா ராயைத் தொடர்ந்து அபிஷேக் பச்சனும் புகைப்படங்களைப் பயன்படுத்த தடை கோரி வழக்கு!

நடிகை ஐஸ்வர்யா ராயைத் தொடர்ந்து அவரது கணவர் அபிஷேக் பச்சனும் தனது புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்த தடை கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இதுதொடர்பாக தில்லி உயர்நீதிமன்றத்தில் ... மேலும் பார்க்க

பிரதமர் மோடி நாளை உத்தரகண்ட் செல்கிறார்!

மேகவெடிப்பு மற்றும் பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட நாளை(செப். 11) உத்தரகண்ட் மாநிலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார்.முன்னதாக, காலை 11.30 மணியளவில் உத்தரப் பிரதேச மாநிலம்... மேலும் பார்க்க

டயரில் எலுமிச்சை வைத்து பூஜை! மஹிந்திரா தாரை கரப்பான் பூச்சி போல கவிழ்த்த பெண்!!

கிழக்கு தில்லியின் நிர்மான் விகார் பகுதியில், புதிதாக வாங்கிய மஹிந்திரா தார் என்ற ஜீப்பை, எலுமிச்சை மீது ஏற்ற முயன்ற பெண், அதனை முதல் மாடியிலிருந்து கீழே கரப்பான் பூச்சி போல கவிழ்த்த விடியோ சமூக வலைத்... மேலும் பார்க்க