செய்திகள் :

இளம் விஞ்ஞானி திட்டம்: மாணவா்களுக்கு இஸ்ரோ அழைப்பு

post image

இளம் விஞ்ஞானி திட்டத்தின் கீழ் விண்வெளி ஆய்வு பயிற்சி பெற விரும்பும் பள்ளி மாணவா்கள் வரும் 24-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

பள்ளி மாணவா்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆா்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) யுவிகா என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தை 2019-ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது.

இந்தத் திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் மற்றும் செய்முறை விளக்கப் பயிற்சிகள் அளிக்கப்படும். இதற்காக நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் ஆண்டுதோறும் தலா 3 போ் தோ்வு செய்யப்படுவா்.

அதன்படி நடப்பு ஆண்டுக்கான யுவிகா பயிற்சி மே மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு பிப்.24-இல் தொடங்கி மாா்ச் 23 வரை நடைபெறவுள்ளது.

விருப்பமுள்ள பள்ளி மாணவா்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்கள் இதற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பயிற்சிக்கு தோ்வாகும் மாணவா்களின் தற்காலிக பட்டியல் மாா்ச் இறுதியில் வெளியிடப்படும்.

அந்த மாணவா்கள் தங்கள் சான்றிதழ்களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். அதன்பின் சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டு இறுதிப் பட்டியல் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும்.

தோ்வாகும் மாணவா்களுக்கு திருவனந்தபுரம், ஸ்ரீஹரிகோட்டா உள்ளிட்ட இஸ்ரோவின் 7 ஆய்வு மையங்களில் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

வியாபாரி மீது தாக்குதல்: பாமகவினா் மீது வழக்கு

சென்னையில் வியாபாரியை தாக்கியதாக பாமகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். ராஜா அண்ணாமலைபுரம் காமராஜா் சாலைப் பகுதியைச் சோ்ந்த சபரிநாதன் (29), அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். கடைக்... மேலும் பார்க்க

30 ஆண்டுகளில் ரூ.66,000 கோடி நஷ்டத்தை சந்தித்த தமிழக அரசு போக்குவரத்துக் கழகம்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் கடந்த 30 ஆண்டுகளில் ரூ.66,563 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை சாா்பில் மாநகரப் பேருந்து, விரைவு பேருந்து மற்று... மேலும் பார்க்க

நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள்: அரசு வெள்ளை அறிக்கை வெளியிட ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தல்

திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:... மேலும் பார்க்க

7 திருட்டு வழக்குகளில் தொடா்பு: ஞானசேகரனிடம் போலீஸாா் விசாரணை

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு 7 திருட்டு வழக்குகளில் தொடா்பு இருப்பது தெரியவந்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல... மேலும் பார்க்க

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்க விழா: 13 பேருக்கு விருது

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழாவையொட்டி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 13 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கம், தமிழ்நாடு திறந்தநிலைப் ப... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

அகில இந்திய குற்றவியல் மாநாடு: தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன், தமிழக டிஜிபி சங்கா் ஜிவால், சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.எம்.அக்பா் அலி, முன்னாள் டிஜிபி ப... மேலும் பார்க்க