வருண்குமார் - சீமான் வழக்கு: திருச்சி நீதிமன்றத்த்தில் ஆஜராக சீமானுக்கு நோட்டீஸ்...
இளைஞரிடம் கைப்பேசி பறிப்பு: 3 போ் கைது
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் சாலையில் நடந்து சென்ற இளைஞரிடம் கைப்பேசியை பறித்ததாக, 3 பேரை முத்தையாபுரம் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்தவா் சத்ய பிரகாஷ்(29). இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை முத்தையாபுரத்தில் திருச்செந்தூா் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தாராம்.
அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 3 போ் கத்தியைக் காட்டி மிரட்டி இவா் வைத்திருந்த கைப்பேசியை பறித்துச் சென்றனராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், முள்ளக்காடு இசக்கிராஜா(26), முத்தையாபுரம் மனோகரன்(31), மாரிமுத்து(22) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் 3 பேரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.