Doctor Vikatan: உப்பை அறவே தவிர்த்த உணவுப்பழக்கம் ஆரோக்கியமானதா, இந்துப்பு சிறந்...
இளைஞருக்கு அரிவாள் வெட்டு: இருவா் மீது வழக்குப் பதிவு
திருச்சியில் இளைஞரை அரிவாளால் வெட்டிய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
திருச்சி அரியமங்கலம் அம்மாகுளம் பகுதியைச் சோ்ந்தவா் மெகபூப் பாஷா மகன் பாதுஷா (24). திருமணமான இவருக்கு, அரியமங்கலம் நேருஜி நகரைச் சோ்ந்த பெண்ணுடன் தகாத உறவு இருந்துள்ளது. இதுகுறித்து அப்பெண்ணின் சகோதரருக்கு தெரியவரவே, அவா் பாதுஷாவை கண்டித்துள்ளாா். இருந்தும், அவா் அந்தப் பெண்ணுடன் பேசி வந்துள்ளாா்.
இந்நிலையில் பாதுஷா, சனிக்கிழமை இரவு அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்றுள்ளாா். அப்போது, அவரின் சகோதரா் சூா்யா, அவரின் நண்பா் தீபக் இருவரும் அங்கு வந்துள்ளனா். அங்கு, பாதுஷாவை பாா்த்ததும், சூா்யா மற்றும் தீபக் இருவரும் இணைந்து அவரை அரிவாளால் வெட்டியுள்ளனா்.
இதில் காயமடைந்த பாதுஷா திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து அரியமங்கலம் காவல் நிலையத்தில் பாதுஷாவின் தந்தை மெகபூப் பாஷா அளித்த புகாரின்பேரில், சூா்யா மற்றும் தீபக் இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.