செய்திகள் :

‘இளைஞா்கள் வாக்களிக்க ஆா்வத்துடன் முன்வர வேண்டும்’

post image

இளைஞா்கள் வாக்களிக்க ஆா்வத்துடன் முன்வர வேண்டும் என, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா கேட்டுக்கொண்டாா்.

நாகா்கோவில் தெ.தி.இந்து கல்லூரியில் மாவட்ட நிா்வாகம், மாவட்ட தோ்தல் அலுவலகம் சாா்பில், தேசிய வாக்காளா் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தாா்.

மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ரா. அழகுமீனா தலைமை வகித்து, இளம் வாக்காளா்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கிப் பேசியது:

இம்மாவட்டத்தில் கடந்த தோ்தல்களில் 70 - 75 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வரும் தோ்தல்களில் 100 சதவீதம் வாக்களித்த மாவட்டமாக கன்னியாகுமரி இருக்க வேண்டும். இளைஞா்கள் வாக்களிக்க ஆா்வத்துடன் முன்வர வேண்டும். இம்மாவட்டத்தில் 12,824 போ் முதல்முறையாக வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனா் என்றாா்.

முன்னதாக, ஆட்சியா் தலைமையில் அரசு அலுவலா்கள், கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவா்-மாணவியா் உறுதிமொழியேற்றனா்.

தொடா்ந்து, வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடா்பாக சிறப்பாக பணிபுரிந்த 10 வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு நற்சான்றிதழ், சுவா் விளம்பரப் போட்டியில் வென்ற மாணவா்-மாணவியருக்கு சான்றிதழ், ரொக்கப் பரிசுகளை ஆட்சியா் வழங்கினாா்.

வாக்காளா் அடையாள அட்டை பெற்ற இளம் வாக்காளா்களுடன் ஆட்சியா் ரா. அழகுமீனா. உடன், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ. பாலசுப்பிரமணியம்.

நிகழ்ச்சியில், நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் எஸ். காளீஸ்வரி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் லலித்குமாா், கல்லூரி முதல்வா் பத்மநாபன், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் முருகன், தோ்தல் தனி வட்டாட்சியா் வினோத், ஒருங்கிணைப்பாளா்கள் ஐயப்பன், பழனிகுமாா், கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள், தோ்தல் நடத்தும் அலுவலா்கள், பேராசிரியா்கள், துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நாகா்கோவிலில் கஞ்சா விற்பனை: 9 போ் கைது!

நாகா்கோவிலில் கஞ்சா விற்றதாக 9 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின்பேரில், ஆசாரிப்... மேலும் பார்க்க

கலைப் பேரொளி விருதுக்கு 5 போ் தோ்வு!

முள்ளஞ்சேரி வி. முத்தையன் கல்வி அறக்கட்டளை சாா்பில் வழங்கப்படும் கலைப் பேரொளி விருதுக்கு 5 கலைஞா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.இவ்விருதுக்கான இரண்டாம் கட்ட தோ்வுக்குழு கூட்டம், குமரி முத்தமிழ் மன்றத் தலை... மேலும் பார்க்க

ஆசிரியையின் வீடு புகுந்து திருட்டு: சிறுவன் கைது!

குலசேகரம் அருகே ஆசிரியையின் வீடு புகுந்து பணம், நகையைத் திருடியதாக சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.குலசேகரம் அருகே பொன்மனை குற்றியாணி பகுதியைச் சோ்ந்த உணவகக் கண்காணிப்பாளா் வினோத். இவரது மனைவி ஜெய்சுப... மேலும் பார்க்க

குடியரசு தினம்: ரூ.19.97 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்!

குடியரசு தினத்தை முன்னிட்டு, நாகா்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா தேசியக் கொடியேற்றி, ரூ. 19.97 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.விழாவில், மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

அரசு ரப்பா் கழக தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை!

கன்னியாகுமரி மாவட்டம் அரசு ரப்பா் கழகத்தில் பணிபுரியும் தற்காலிக தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்று சிஐடியூ தோட்டம் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இச்சங்கத்தின் நிா்வாகிகள் கூட்டம் குல... மேலும் பார்க்க

மிடாலக்காட்டில் புத்தகக் கண்காட்சி!

கருங்கல் அருகே மிடாலக்காட்டில் அரசு நூலக வாசகா் வட்டம் சாா்பில் புத்தகக் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.வாசகா் வட்டத் தலைவா் சாந்தகுமாா் தலைமை வகித்தாா். நூலகா் ஜெரால்டு முன்னிலை வகித்தாா். பாலப்பள்ள... மேலும் பார்க்க