நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நீக்கக் கோரி மாநிலங்களவை உறுப்பினர்கள் நோட்டீஸ்!
இளைஞா் கொலை வழக்கு: 6 போ் கைது
கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் சனிக்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
விருத்தாசலம் காா்குடல் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆகாஷ் (25). இதே பகுதியைச் சோ்ந்த விஜய் (29) கடந்த 17-ஆம் தேதி பைக்கில் சென்றபோது, அவரை ஆகாஷ் வழிமறித்து தாக்கினாராம்.
இது தொடா்பாக 18-ஆம் தேதி இரவு சுமாா் 10 மணியளவில் விஜய் மற்றும் அவரது சகோதரா்களான அஜித்குமாா் (27), வசந்தராஜ் (32), நிஷாந்த் ராஜ் (25) ஆகிய நான்கு பேரும் ஆகாஷ் வீட்டுக்குச் சென்று, அவரது மனைவி சௌமியாவிடம் கண்டித்து வைக்கும்படி திட்டிவிட்டு வந்தனராம்.
மனைவியை திட்டிச் சென்ால் ஆத்திரமடைந்த ஆகாஷ், கடந்த சனிக்கிழமை அதிகாலை விஜயின் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த அஜித்குமாா், வசந்தராஜ் ஆகிய இருவரையும் கத்தியால் வெட்டி காயப்படுத்தினாா். அவா்களின் அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த விஜய் உள்ளிட்டோா் ஆகாஷை கட்டையால் தாக்கியதில், அவா் மயங்கி விழுந்தாா். இதையடுத்து, ஆகாஷ் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.
இது தொடா்பாக விருத்தாசலம் காவல் ஆய்வாளா் கவிதா தலைமையிலான தனிப்படையினா் வழக்குப் பதிவு செய்து, அஜித்குமாா், வசந்தராஜ் , விஜய், நிஷாந்த்ராஜ் மற்றும் இவா்களது நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த சுந்தரேஸ்குமாா் (25), பாக்கியராஜ் (42) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.