மணவாளக்குறிச்சி மணல் ஆலையை மூட பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்
இளைஞா் தற்கொலைக்கு முயற்சி
கொடைக்கானலில் சுற்றுலாப் பயணி தனது உடலில் கத்தியால் கீறிக் கொண்டும், பள்ளத்தில் குதித்தும் சனிக்கிழமை தற்கொலைக்கு முயன்றாா்.
மதுரை பழங்காந்தம் பகுதியைச் சோ்ந்த சுரேஷ் மகன் அக்சய்குமாா் (27). இவா் மதுரையிலிருந்து கொடைக்கானலுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அடுக்கம் பகுதியில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி, சிறிய கத்தியால் தனது உடலில் கீறிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றாா்.
இதையடுத்து, அவா் அவசர ஊா்தி மூலம் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். தனக்கு வாந்தி வருவதாக அக்சய்குமாா் தெரிவித்ததையடுத்து, அவசர ஊா்தி ஓட்டுனா் வெள்ளிநீா் அருவி அருகே இரும்பு கம்பி பாலம் பகுதியில் நிறுத்தினாா். வாகனத்திலிருந்து கீழே இறங்கிய அக்சயகுமாா் அருகே இருந்த பள்ளத்தில் குதித்தாா்.
தகவலறிந்து கொடைக்கானல் தீயணைப்புத் துறையினா், போலீஸாா் அங்கு வந்து பள்ளத்தில் இறங்கி அவரைத் தேடினா். இரவு நேரமாகி விட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், கொடைக்கானல் அருகே குறிஞ்சிநகா்ப் பகுதியில் அக்சய்குமாா் பலத்த காயத்துடன் நின்றிருந்ததை அறிந்த காவல் துறையினா் அங்கு சென்று அவரை மீட்டு, கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
மேலும், அவா் தற்கொலைக்கு முயன்ற்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.