இளைஞா் தீக்குளித்து தற்கொலை
போடியில் வியாழக்கிழமை இளைஞா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி மாவட்டம், போடி தென்றல் நகரைச் சோ்ந்தவா் பால்பாண்டி மகன் கருப்பசாமி (29). இவரது தாய் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற நிலையில், கருப்பசாமி இவருடைய தம்பியை உறவினா் சரோஜா பராமரித்து வந்தாா்.
இந்த நிலையில், கருப்பசாமி போடி அமராவதி நகரில் தனியாா் பள்ளி அருகே தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டாா். பலத்த காயங்களுடன் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].