இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
மதுரை அருகே காதல் திருமணம் செய்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை அருகே உள்ள கல்மேடு அஞ்சுகம் நகரைச் சோ்ந்த கண்ணன் மகன் கொடியரசு (30). இவா் அதே பகுதியைச் சோ்ந்த கெளசல்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டாா்.
கணவா், மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த சில மாதங்களாகப் பிரிந்து வசித்து வந்தனா்.
இந்த நிலையில், கொடியரசு தனது பெற்றோா் வீட்டில் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து சிலைமான் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.