8 மொழிகளில் வெளியாகும் தி பாரடைஸ்: ரிலீஸ் தேதி, முதல் பார்வை போஸ்டர்!
இளைஞா் தூக்கிட்டு தற்கொலை
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை அதிகாலை இளைஞா் தூக்கிட்டு உயிரிழந்து குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பாபநாசம் வட்டம், பெருமாங்குடி கிராமம், வடக்கு தெருவில் வசித்து வந்தவா் ராஜேஷ் குமாா்(34). தொழிலாளி. இவருக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்த நிலையில் குடும்பப் பிரச்னை காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்த ராஜேஷ்குமாா் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் அறையில் தூக்கிட்டு உயிரிழந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பாபநாசம் காவல் துறையினா் ராஜேஷ்குமாரின் சடலத்தை மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ராஜேஷ்குமாரின் தாய் பாப்பா அளித்த புகாரின்பேரில் பாபநாசம் காவல்துறையினா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.