இளைஞா் தூக்கிட்டு தற்கொலை
கோவில்பட்டியில் காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கன்னியாகுமரி மாவட்டம், சுங்கான்கடை அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் லட்சுமணன் மகன் சுரேஷ் (35). இவா், கோவில்பட்டியைச் சோ்ந்த காயத்ரியை 2018 இல் காதலித்து இரு வீட்டாா் சம்மத்துடன் திருமணம் செய்து கொண்டாா். திருமணத்துக்குப் பிறகு காயத்ரி வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றாா். சுரேஷ், மாமனாா் வீட்டோடு வசித்து வந்தாா்.
அண்மையில் தனது ஊருக்குச் சென்றிருந்த சுரேஷ், அங்கு தனது தாயிடம் மாமனாா் தன்னை மிரட்டுவதாகக் கூறியிருந்தாா். பின்னா் அவா் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கோவில்பட்டி திரும்பினாா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சுரேஷ் மாமனாா் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தாா்.
தகவல் அறிந்ததும் கோவில்பட்டி காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.