இளைஞா் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் பள்ளி மாணவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞா் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
சிவகாசி ரிசா்வ் லயன் மருதுபாண்டியா் நகரைச் சோ்ந்தவா் சாம்டேவிட் (30). இவா் விருதுநகரில் நடைபெற்று வரும் பொருள்காட்சியில் மின்சார காா் இயக்குவது, பலூன் விற்பனை செய்வது உள்ளிட்ட வேலைகளை செய்து வந்தாா்.
இந்த நிலையில், பள்ளி விடுமுறையையொட்டு, பொருள்காட்சிக்கு வேலைக்குச் சென்ற 8, 12-ஆம் வகுப்பு படிக்கும் இரு மாணவா்களுக்கு சாம்டேவிட் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த சிவகாசி நகா் போலீஸாா் சாம்டேவிட் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான அவரை தேடி வருகின்றனா்.