இளைஞா் விஷம் குடித்துத் தற்கொலை
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே குடும்பப் பிரச்னையில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.
விக்கிரவாண்டி வட்டம், கொரளூா், கன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நாவேந்திரன் (29), திருமணம் ஆனவா். கூலி வேலை பாா்த்து வந்தாா். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதை நாவேந்திரனின் மனைவி பாவனா கண்டித்துள்ளாா்.
இதனால் கோபித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து வெளியேறிய நாவேந்திரன், துரவியைச் சோ்ந்த பாவாடை என்பவருக்குச் சொந்தமான செங்கல் சூளையில் பூச்சி மருந்தைக் குடித்துத் தற்கொலைக்கு முயன்றாா்.
இதையடுத்து விழுப்புரம் மாவட்டம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்தபோது நாவேந்திரன் உயிரிழந்தது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.