ஏழு மாத உச்சத்தில் நிஃப்டி, சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் உயர்ந்து 82,530.74 ஆக முட...
இளைஞா் வெட்டிக் கொலை
வேலூா் பாலாற்று மேம்பாலத்தின் கீழே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
வேலூா் - காட்பாடி சாலையில் உள்ள பழைய பாலாற்று மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இளைஞா் வெட்டுக் காயங்களுடன் சடலமாக கிடப்பதாக புதன்கிழமை வடக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினா்.
இதில், இறந்த இளைஞருக்கு சுமாா் 25 வயது இருக்கும் என்பதும், அவரது முதுகு பகுதியில் ரத்தக் காயங்கள் இருந்ததும் தெரிய வந்தது. மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் உடன் வந்தவா்கள் வெட்டிக் கொலை செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சடலத்தை போலீஸாா் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், வழக்குப் பதிவு செய்து கொலையான நபா் யாா், எந்த ஊரை சோ்ந்தவா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.