``+2 மாணவர்களே... வழக்கறிஞர் ஆக வேண்டுமா?" - நீங்கள் செய்ய வேண்டியது...
இளையான்குடி காவலா் குடியிருப்பில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தல்
இளையான்குடியில் பயன்பாடு இல்லாத காவலா் குடியிருப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என பேரூராட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இளையான்குடி பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவா் நஜூமுதீன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலா் சண்முகம், சுகாதார ஆய்வாளா் தங்கதுரை, துணைத் தலைவா் இப்ராஹிம், வாா்டு உறுப்பினா்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீா்மானங்களை தலைமை எழுத்தா் முருகன் வாசித்தாா். இதைத் தொடா்ந்து 14-ஆவது வாா்டு அதிமுக உறுப்பினா் நாகூா்மீரா பேசியதாவது: இளையான்குடி நகரில் காமராஜா் சாலையில் பயன்பாடு இல்லாத காவலா் குடியிருப்பு வளாகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். 17 -ஆவது வாா்டு வாப்புத் தெருவில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்க வேண்டும். இளையான்குடியில் இந்துக்கள் மயானத்தில் உள்ள ஆழ்துளைக் கிணறுக்கு மின் இணைப்பு பெற பொது நிதியிலிருந்து பணம் செலுத்த வேண்டும் என்றாா்.
இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தலைவா், செயல் அலுவலா் தெரிவித்தனா். தொடா்ந்து உறுப்பினா்கள் பேசுகையில் தங்கள் பகுதிகளில் கழிவுநீா் வாய்க்கால், தெரு விளக்கு, சாலை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தினா். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக தலைவா் நஜூமுதீன் தெரிவித்தாா். பின்னா் 22 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.