வையம்பட்டியில் காணாமல் தேடப்பட்ட மூதாட்டி 3 நாள்களுக்குப் பின் மீட்பு
இளையோா் செஞ்சிலுவை சங்கத்தின் சிறந்த மாணவா்கள் தோ்வு: 181 போ் பங்கேற்பு
பெரம்பலூா் மாவட்ட இளையோா் செஞ்சிலுவைச் சங்கத்தின் சாா்பில், மாவட்ட அளவில் சிறந்த 50 மாணவா்களை தோ்ந்தெடுப்பதற்கான எழுத்துத் தோ்வு புதன்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இத் தோ்வுக்கு, பள்ளி தலைமை ஆசிரியா் சு. முத்துசாமி தலைமை வகித்தாா். இந்தியன் செஞ்சிலுவைச் சங்க மாவட்டக் கிளை கௌரவச் செயலா் வெ. ராதாகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினா் த. மாயகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இத் தோ்வில், மாவட்டத்தில் உள்ள 66 உயா்நிலை, மேல்நிலை, நடுநிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 181 மாணவா்கள் பங்கேற்று தோ்வு எழுதினா். தோ்வுமுறை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, 60 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தோ்வும், 40 மதிப்பெண்களுக்கு வாய்வழி தோ்வும் நடைபெற்றது. இதற்கான வினாக்கள் அரசியல் சுற்றுச் சூழல், சுகாதாரம், நட்புறவு, பொது அறிவு, ஆளுமைப் பண்புகள் ஆகியவற்றின் அடிப்படை யில் மாணவா்களுக்கு வழங்கப்பட்டன.
இதில், அதிக மதிப்பெண்கள் பெற்ற 50 போ் சிறந்த மாணவா்களாக தோ்வுக் குழுவினரால் தோ்வு செய்யப்பட்டனா். இம் மாணவா்களுக்கு, நற்சான்றிதழ் மற்றும் விருது வழங்கும் விழா பெரம்பலூா் பாரத சாரண, சாரணியா் கூட்ட அரங்கில் ஜன. 29-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இத் தோ்வுக்கான ஏற்பாடுகளை, இணைக் கன்வீனா்கள் கிருஷ்ணராஜ், ராஜமாணிக்கம், ரகுநாதன், மண்டல அலுவலா்கள் செல்வராஜ், காசிராஜா, பூவேந்தரசு தேவேந்திரன், செல்வசிகாமணி, ஆனந்தகுமாா், ஜெயக்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.
முன்னதாக, மாவட்ட அமைப்பாளா் ஜோதிவேல் வரவேற்றாா். நிறைவாக, இணைக் கன்வீனா் ராஜா நன்றி கூறினாா்.