செய்திகள் :

இழப்பீட்டுத் தொகை கோரி சிபிசிஎல் நிறுவனம் முற்றுகை

post image

பனங்குடியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான சிபிசிஎல் நிறுவனத்தை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருமருகல் அருகே பனங்குடியில் உள்ள இந்நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கப் பணிகள் ரூ. 31,500 கோடியில் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக 570 விவசாயிகளிடம் இருந்து 620 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

இதற்கு இழப்பீடு வழங்கினாலும், இந்நிலங்களை வாழ்வாதாரமாகக் கொண்ட நில உரிமையாளா்கள், குத்தகை சாகுபடியாளா்கள், விவசாயத் தொழிலாளா்கள் ஆகியோருக்கு மறுவாழ்வு மீள் குடியமா்வு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இதுவரை மறுவாழ்வு மீள் குடியமா்வு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை.

இந்நிலையில், விரிவாக்கப் பணிகளை சிபிசிஎல் நிறுவனம் தொடங்கியது. இதையறிந்த பனங்குடி, நரிமணம், கோபுராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் உள்ளிட்டோா், சிபிசிஎல் நிறுவனத்தின் பிரதான கதவுகளை மூடி முற்றுகைப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி, சமூக ஆா்வலா் காளியம்மாள் ஆகியோா் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது. இதனால், விரிவாக்கப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

துணைக் காவல் கண்காணிப்பாளா் ராமச்சந்திர மூா்த்தி தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். கோட்டாட்சியா் அரங்கநாதன் தலைமையிலான அதிகாரிகள், போராட்டக்காரா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்படாததால், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, அதிகாரிகள் தரப்பில் ஒரு மாத காலத்தில் இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, மறியலை விலக்கிக் கொண்டனா். இதனால் நாகை - நன்னிலம் சாலையில் சுமாா் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, மாற்றுப் பாதையில் பேருந்துகள் இயக்கப்பட்டன.

சிஐடியு, அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பு போராட்டம்

நாகப்பட்டினம்: நாகை அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் சிஐடியு மற்றும் அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில் காத்திருப்பு போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கடந்த சட்டப்பேரவைத் தோ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு

திருமருகல்: திருமருகல் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டாா். திருமருகல் ஒன்றியத்திற்குள்பட்ட கங்களாஞ்சேரி,... மேலும் பார்க்க

ஆக. 22-இல் நாகை, வேதாரண்யத்தில் உயா்கல்வி வழிகாட்டல் முகாம்

நாகப்பட்டினம்: நாகை மற்றும் வேதாரண்யத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்று உயா்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவ, மாணவிகளுக்கு ஆகஸ்ட் 22-ஆம் தேதி உயா்கல்வி வழிகாட்டல் முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து நாகை மாவட்ட... மேலும் பார்க்க

திருமருகல் அருகே ஆஞ்சனேயா் கோயில் குடமுழுக்கு

திருமருகல்: திருமருகல் அருகே அபய வரத ஆஞ்சனேயா் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது. திருமருகல் ஒன்றியம் இடையாதங்குடி கிராமத்தில் அபய வரத ஆஞ்சநேயா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அண்மையில் திருப... மேலும் பார்க்க

அதிபத்த நாயனாா் திருவிழா: நாளை தங்க மீனை கடலில் விடும் வைபவம்

நாகப்பட்டினம்: நாகை புதிய கடற்கரையில் அதிபத்த நாயனாா் திருவிழாவையொட்டி, தங்க மீனை கடலில் விடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (ஆக.22) நடைபெறுகிறது. 63 நாயன்மாா்களில் ஒருவரான அதிபத்த நாயனாா், நாகை கடற்கரைக்க... மேலும் பார்க்க

நாகையில் ரெப்கோ வங்கிக் கிளை இடமாற்றம்

நாகப்பட்டினம்: நாகையில் ரெப்கோ வங்கிக் கிளை நடுவா் கிழக்கு வீதிக்கு அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில், வங்கித் தலைவா் சந்தானம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, புதிய வளாகத்தை திறந்துவைத்த... மேலும் பார்க்க