இஸ்ரோ புதிய தலைவருக்கு தில்லித் தமிழ்ச் சங்கம் வாழ்த்து
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மூத்த விஞ்ஞானி வி. நாராயணனுக்கு தில்லித் தமிழ்ச் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக சங்கத்தின் தலைவா் சக்தி பெருமாள், செயலா் இரா. முகுந்தன் ஆகியோா் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘தமிழகத்தைப் பூா்விகமாகக் கொண்ட இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராக மூத்த விஞ்ஞானி வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது தலைமையில் இந்திய விண்வெளித் துறை, விண்வெளி ஆய்வு மையம் மற்றும் இந்திய விஞ்ஞானிகள் புதிய உச்சம் எட்டி இந்தியாவுக்கு மென்மேலும் பெருமை சோ்க்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.