முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!
ஈரான் அதிபர் பாகிஸ்தான் சுற்றுப்பயணம்
ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சனிக்கிழமை பாகிஸ்தான் சென்றுள்ளார்.
லாகூர் வந்த அவரை முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், பஞ்சாப் முதல்வர் மரியம் நவாஸ் மற்றும் மத்திய வீட்டுவசதி அமைச்சர் ரைஸ் உசேன் ஆகியோர் வரவேற்றனர்.
தொடர்ந்து இன்றிரவு அவர் இஸ்லாமாபாத்திற்கு பயணம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, மூத்த அமைச்சர்கள் மற்றும் பிற உயர் அதிகாரிகள் உள்பட உயர் மட்டக் குழு அவருடன் செல்கிறது.
பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப்பின் அழைப்பின் பேரில் ஈரான் அதிபர் மசூத் பாகிஸ்தானில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார் என்று வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! -மோடி
இந்த பயணத்தின் போது பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜா்தாரி, பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் ஆகியோரைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஈரான் அதிபர் மசூத் பேச்சுவார்த்தை நடத்துவார் எனக் கூறப்படுகிறது.
ஈரான் அதிபராக மசூத்தின் பாகிஸ்தானின் முதல் அதிகாரப்பூர்வ பயணம் இதுவாகும்.
முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் கடந்த மே 26ஆம் தேதி ஈரான் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து ஈரான் அதிபர் தற்போது பாகிஸ்தான் வந்துள்ளார்.