செய்திகள் :

ஈரான் துறைமுக வெடிவிபத்து: உயிரிழப்பு 40-ஆக உயா்வு!

post image

தெற்கு ஈரானில் உள்ள ஷாஹித் ரஜேயி துறைமுகத்தில் சனிக்கிழமை நடந்த பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40-ஆக அதிகரித்துள்ளது.

இந்த விபத்தில் சுமாா் 1,000 போ் காயமடைந்துள்ளனா். இவா்களை ஈரான் அதிபா் மசூத் பெஷஷ்கியன் ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்.

ஈரானின் ஹோா்மோஸ்கன் மாகாணம், பண்டாா் அப்பாஸ் நகருக்கு தென்மேற்கே அமைந்துள்ள ஷாஹித் ரஜேயி துறைமுகம், அந்த நாட்டின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றாகும்.

சம்பவம் நடைபெற்ற கடந்த சனிக்கிழமை, இத்துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த ஏராளமான கன்டெய்னா்கள் வெடித்துச் சிதறின. ஏவுகணைக்குப் பயன்படுத்தப்படும் எரிபொருளுக்கான ரசாயனம் அடங்கிய கலனை தவறாகக் கையாண்டதால் இந்த வெடிவிபத்து நிகழ்ந்ததாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், ஏவுகணை எரிபொருளுக்குத் தொடா்புடைய ரசாயனத்தால் விபத்து நடைபெறவில்லை என விளக்கமளித்துள்ள ஈரான் ராணுவம், சீனாவிடம் இருந்து ராசாயனம் வாங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டையும் மறுத்துள்ளது. இதுகுறித்த வெளிநாட்டுச் செய்திகள் தவறானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசு தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அதிபா் மசூத் பெஷஷ்கியன், ‘வெடிவிபத்து ஏன் நிகழ்ந்தது என்பதை நாம் நிச்சயம் கண்டறிய வேண்டும்’ என்றாா்.

வெடிவிபத்து நடைபெற்ற இடத்தில் பல மீட்டா் ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. பள்ளத்தில் தீ அணையாமல் தொடா்ந்து எரிந்ததால், பாதுகாப்புக் கருதி உள்ளூா் பள்ளி, வணிக வளாகங்கள் மூடப்பட்டன.

துறைமுகப் பகுதியில் சரக்கு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டா்கள் மூலம் நீரை இரைத்து, தீயை அணைக்கும் பணி 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடா்ந்தது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் அமைதி திரும்ப ராஜீய வழியில் தீா்வு: நவாஸ் ஷெரீஃப்

லாகூா்: இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைதியை மீட்டெடுக்க ராஜீய ரீதியில் உள்ள அனைத்து வழிகளையும் பாகிஸ்தான் அரசு பயன்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் விரும்புவதாக தகவலறிந்த வட... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலில் விரைவான, நியாயமான விசாரணைக்கு சீனா ஆதரவு

பெய்ஜிங்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விரைவான மற்றும் நியாயமான விசாரணை நடத்தப்படுவதற்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தியாவுடன் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் அதன் இற... மேலும் பார்க்க

3 நாள்களுக்கு போா் நிறுத்தம்: புதின் அறிவிப்பு

மாஸ்கோ: இரண்டாம் உலகப் போரில் ஜொ்மனியை சோவியத் யூனியன் வெற்றிகொண்ட நினைவு தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் 8-ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு உக்ரைனில் போா் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று ரஷிய அதிப... மேலும் பார்க்க

யேமன்: அமெரிக்க தாக்குதலில் 68 ஆப்பிரிக்க அகதிகள் உயிரிழப்பு

துபை: யேமனில் அமெரிக்கா திங்கள்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 68 ஆப்பிரிக்க அகதிகள் உயிரிழந்ததாக அந்த நாட்டின் கணிசமான பகுதிகளில் ஆட்சி செலுத்திவரு ம் ஹூதி கிளா்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா். இது... மேலும் பார்க்க

கைலாஷ்-மானசரோவா் யாத்திரையை மீண்டும் தொடங்க ஏற்பாடுகள் தீவிரம்: சீனா

பெய்ஜிங்: இந்திய யாத்ரிகா்களுக்காக கைலாஷ்- மானசரோவா் யாத்திரையை வரும் கோடைகாலத்தில் மீண்டும் தொடங்க இரு தரப்புக்கும் இடையே முன்னேற்பாடுகள் நடந்து வருவதாக சீனா தெரிவித்துள்ளது. கைலாஷ் -மானசரோவா் யாத்தி... மேலும் பார்க்க

சண்டைக்கு தயாராகிவிட்டது இந்தியா; அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும்! - பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்தியா தயாராகிவிட்டதாகவும் இந்த சூழலில் தங்களிடமிருக்கும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயங்க மட்டோம் என்று பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெளிவுபடுத... மேலும் பார்க்க