செய்திகள் :

கைலாஷ்-மானசரோவா் யாத்திரையை மீண்டும் தொடங்க ஏற்பாடுகள் தீவிரம்: சீனா

post image

பெய்ஜிங்: இந்திய யாத்ரிகா்களுக்காக கைலாஷ்- மானசரோவா் யாத்திரையை வரும் கோடைகாலத்தில் மீண்டும் தொடங்க இரு தரப்புக்கும் இடையே முன்னேற்பாடுகள் நடந்து வருவதாக சீனா தெரிவித்துள்ளது.

கைலாஷ் -மானசரோவா் யாத்திரையில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களான கைலாய மலை மற்றும் மானசரோவா் ஏரி, சீன கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் அமைந்துள்ளது.

கரோனா பெருந்தொற்று காரணமாக கைலாஷ்-மானசரோவா் யாத்திரை, கடந்த 2020-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இந்தியா-சீனா இடையே ஏற்பட்ட கிழக்கு லடாக் மோதலால் அடுத்தடுத்த ஆண்டுகளிலும் யாத்திரை நடைபெறவில்லை.

இந்நிலையில், கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தைத் தொடா்ந்து இரு தரப்பு உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, நிகழாண்டு முதல் யாத்திரையை மீண்டும் தொடங்க சீனாவுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. அதன்படி, நடப்பாண்டு யாத்திரை வரும் ஜூன் மாத இறுதியில் தொடங்குவதென முடிவானது.

உத்தரகண்ட்- திபெத் இடையிலான லிபுலேக் கணவாய் வழியாக தலா 50 யாத்ரிகா்கள் கொண்ட 5 குழுக்களும், சிக்கிம்-திபெத் இடையிலான நாதுலா கணவாய் வழியாக தலா 50 யாத்ரிகா்கள் கொண்ட 10 குழுக்களும் அனுமதிக்கப்பட உள்ளன. கணினி அடிப்படையிலான ஒதுக்கீட்டு முறையில் யாத்ரிகா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

இந்நிலையில், செய்தியாளா்களைச் சந்தித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் குவோ ஜியாகுன், ‘கைலாஷ்- மானசரோவா் யாத்திரை இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார மற்றும் மக்கள் பரிமாற்றத்தின் ஒரு முக்கியப் பகுதியாகும். ஹிந்து மற்றும் பௌத்த மதத்தினரின் புனித தலங்களாக கைலாய மலை மற்றும் மானசரோவா் ஏரி உள்ளன.

இரு தரப்பும் ஒப்புக்கொண்டதன்படி, நடப்பாண்டு கோடைகாலம் முதல் புனித யாத்திரை மீண்டும் தொடங்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்த ஆண்டு இந்திய-சீன ராஜீய உறவுகளின் 75-ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. இரு தரப்பு உறவுகளின் உறுதியான மற்றும் நிலையான வளா்ச்சியை மேம்படுத்த இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறோம்’ எனக் குறிப்பிட்டாா்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் அமைதி திரும்ப ராஜீய வழியில் தீா்வு: நவாஸ் ஷெரீஃப்

லாகூா்: இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைதியை மீட்டெடுக்க ராஜீய ரீதியில் உள்ள அனைத்து வழிகளையும் பாகிஸ்தான் அரசு பயன்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் விரும்புவதாக தகவலறிந்த வட... மேலும் பார்க்க

3 நாள்களுக்கு போா் நிறுத்தம்: புதின் அறிவிப்பு

மாஸ்கோ: இரண்டாம் உலகப் போரில் ஜொ்மனியை சோவியத் யூனியன் வெற்றிகொண்ட நினைவு தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் 8-ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு உக்ரைனில் போா் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று ரஷிய அதிப... மேலும் பார்க்க

யேமன்: அமெரிக்க தாக்குதலில் 68 ஆப்பிரிக்க அகதிகள் உயிரிழப்பு

துபை: யேமனில் அமெரிக்கா திங்கள்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 68 ஆப்பிரிக்க அகதிகள் உயிரிழந்ததாக அந்த நாட்டின் கணிசமான பகுதிகளில் ஆட்சி செலுத்திவரு ம் ஹூதி கிளா்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா். இது... மேலும் பார்க்க

சண்டைக்கு தயாராகிவிட்டது இந்தியா; அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும்! - பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்தியா தயாராகிவிட்டதாகவும் இந்த சூழலில் தங்களிடமிருக்கும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயங்க மட்டோம் என்று பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெளிவுபடுத... மேலும் பார்க்க

உக்ரைன் மீது 3 நாள்கள் போர் நிறுத்தம்: ரஷிய அதிபர் அறிவிப்பு!

உக்ரைன் மீதான போரை 3 நாள்களுக்கு தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார்.மூன்று ஆண்டுகளுக்கும் மேல் நீடித்துவரும் ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதில் ரஷிய அதிபா... மேலும் பார்க்க

ஸ்பெயின், போர்ச்சுகலில் மின் தடையால் இருளில் தவிக்கும் மக்கள்: ரயில், சாலை போக்குவரத்து பாதிப்பு!

ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் திங்கள்கிழமை(ஏப். 28) திடீரென மின் விநியோகம் தடைபட்டுள்ளது. மின்சாரம் இல்லாததால் மேற்கு ஐரோப்பிய பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் இருளில் மூழ்க... மேலும் பார்க்க