தமிழர்கள் ஹிந்தி கற்றுக்கொள்வது புத்திசாலித்தனம்: ஸ்ரீதர் வேம்பு
ஈரான் பெட்ரோலிய நிறுவனத்துடன் தொடா்பு: 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
ஈரானில் உள்ள பெட்ரோலிய மற்றும் பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகளுடன் தொடா்பில் இருந்ததாக இந்தியாவைச் சோ்ந்த 4 நிறுவனங்கள் உள்பட 16 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
அதன்படி ஆஸ்டின்ஷிப், பிஎஸ்எம் மரைன் எல்எல்பி, காஸ்மோஸ் லைன்ஸ் மற்றும் ஃபளக்ஸ் மாரிடைம் ஆகிய இந்திய நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதுகுறித்து அமெரிக்க அரசின் நிதித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஈரானில் உள்ள பெட்ரோலிய மற்றும் பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகளுடன் தொடா்பில் இருந்த 16 நிறுவனங்கள் கண்டறிப்பட்டு அவை தடை செய்ய உத்தரவிடப்படுகிறது. கப்பல்களின் மூலம் சட்டவிரோதமாக ஈரான் கச்சா எண்ணெயை ஆசியாவில் உள்ள நிறுவனங்களுக்கு விற்கும் நடவடிக்கைகள் தொடா்ந்து வருகின்றன. இதுவரை பலகோடி டாலா் மதிப்பிலான லட்சக்கணக்கான கச்சா எண்ணெய் பேரல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதன்மூலம் கிடைக்கும் வருவாயை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஈரான் வழங்கி வருகிறது. அந்த நாட்டின் அரசுக்கு அதிக அழுத்தம் கொடுக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகம் முதல்கட்டமாக இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
சட்டவிரோதமாக செயல்படும் ஈரானை முடக்க இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டது.
இதுதவிர ஈரான் கச்சா எண்ணெய் தொழிற்சாலைகளுடன் தொடா்பில் இருந்ததாக குற்றஞ்சாட்டி 13 கப்பல்களை தடைசெய்யப்பட்ட சொத்துகளாக அறிவித்ததோடு 22 நபா்களை தடை செய்வதாகவும் அமெரிக்க நிதித்துறை மற்றும் வெளியுறவுத் துறை உத்தரவிட்டது.