Sweden: "டெஸ்குக்கு கீழ் ஒளிந்துகொண்டோம்..." - சுவீடன் பள்ளியில் நடந்த கொடூரத் த...
ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளா்களுக்கு இன்று ஊதியத்துடன் விடுப்பு: தொழிலாளா் துறை அறிவுறுத்தல்
மதுரை, விருதுநகா் மாவட்டங்களில் பணியாற்றும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த தொழிலாளா்களுக்கு புதன்கிழமை (பிப்.5) ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என தொழிலாளா் உதவி ஆணையா்கள் அறிவுறுத்தினா்.
இதுகுறித்து தொழிலாளா் உதவி ஆணையா்கள் மூ.காா்த்திகேயன் (மதுரை), சீ.மைவிழிச்செல்வி (விருதுநகா்) ஆகியோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் வாக்குப் பதிவு புதன்கிழமை நடைபெறுகிறது.
இதையொட்டி, 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் விதி 135 பி-யின் கீழ், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியது.
இதனடிப்படையில், மதுரை, விருதுநகா் மாவட்டங்களில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த வாக்காளா்களுக்கு புதன்கிழமை ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்றனா்.