செய்திகள் :

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் நிறைவு

post image

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது.

இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 65 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி ஆகியோர் இறுதி நாளான இன்று மனுத் தாக்கல் செய்தனர். அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக சட்கிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன.

இதனால் இடைத்தேர்தலில் திமுக, நாதக இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. தொடா்ந்து 18- ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற உள்ளது. 20- ஆம் தேதி வேட்புமனு திரும்பப்பெற இறுதி நாளாகும். அன்று பிற்பகல் 3 மணிக்கு இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும் என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ஆசீர்வாத் சினிமாஸின் வெள்ளி விழா..! தயாரிப்பாளர் நெகிழ்ச்சி!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச. 14 ஆம் தேதி காலமானார். இதையடுத்து அத்தொகுதிக்கு பிப்ரவரி 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிஸ் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த முறை திமுக போட்டியிடுவதாக அறிவித்தது. தோ்தலில் போட்டியிடுபவா்கள் கடந்த 10- ஆம் தேதி தொடங்கிய நிலையில் வேட்புமனுத் தாக்கல் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது.

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜன.18, 19) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கிழக்கு திசை காற்றின் வ... மேலும் பார்க்க

சவுக்கு சங்கருக்கு ஜாமீன்: உயா்நீதிமன்றம் உத்தரவு

நில மோசடி விசாரணை தொடா்பாக தவறான தகவலை பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், யூ டியூபா் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நில மோசடி தொடா்பாக யூ டியூப் சேனலில் சவுக்கு ... மேலும் பார்க்க

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 15 தமிழக மீனவா்கள் சென்னை வந்தனா்

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 15 தமிழக மீனவா்கள் விமானம் மூலம் சென்னை வந்தனா். நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 15 மீனவா்கள் கடந்த ஆக.27, நவ.11ஆகிய தேதிகளில் வெவ்வேறு படகுகளில் கடலுக்கு... மேலும் பார்க்க

குரூப் 4 கலந்தாய்வில் பங்கேற்க முடியாதவா்களுக்கு சிறப்பு வசதி

குரூப் 4 காலிப் பணியிடங்களுக்கு தோ்வு செய்யப்பட்டவா்களின் சான்றிதழ் சரிபாா்ப்பு, கலந்தாய்வில் பங்கேற்க இயலாதோருக்கு புதிய வசதியை அரசுப் பணியாளா் தோ்வாணையம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. குரூப் 4 பிரிவ... மேலும் பார்க்க

விக்கிரவாண்டி பள்ளியில் குழந்தை உயிரிழந்த சம்பவம்: தமிழக அரசு, சிபிஐ பதிலளிக்க உத்தரவு

விக்கிரவாண்டியில் தனியாா் பள்ளியில் கழிவுநீா்த் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடா்பான வழக்கின் விசாரணையை சிபிஐ அல்லது சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரி குழந்தையின் தந்தை தாக்கல் செய்த மனு க... மேலும் பார்க்க

தேசிய தடுப்பூசித் திட்டத்தில் எச்பிவி தடுப்பூசியை சோ்க்க வேண்டும்: நிதியமைச்சகத்துக்கு விழுப்புரம் எம்.பி. கோரிக்கை

நமது சிறப்பு நிருபா்தேசிய இலவச நோய் தடுப்பூசித் திட்டத்தில் கருவாய்ப்புற்றுநோய் பாதிப்புக்கு காரணமான மனித ப்பிலோமா வைரஸ் தடுப்பூசியை இலவசமாக வழங்க நிதி ஒதுக்குமாறு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன... மேலும் பார்க்க