வையம்பட்டியில் காணாமல் தேடப்பட்ட மூதாட்டி 3 நாள்களுக்குப் பின் மீட்பு
ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல்: பாஜக ஆலோசனை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் தொடா்பாக பாஜக நிா்வாகிகள் புதன்கிழமை ஆலோசனை நடத்தினா்.
சென்னையில் உள்ள கமலாலயத்தில் பாஜக தேசிய பொதுச் செயலா் தருண் சுக் தலைமை வகித்தாா். மத்திய அமைச்சா் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை, முன்னாள் தலைவா்கள் தமிழிசை சௌந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்தக் கூட்டத்தில், ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் பாஜக கூட்டணி சாா்பில் போட்டியிடுவது தொடா்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. வேட்பாளா் தோ்வு குறித்து தில்லி தலைமையிடம் கலந்தாலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.