கொள்ளை அடித்த பணத்தில் நடிகைகளுடன் நெருக்கம்; காதலிக்கு ரூ.3 கோடிக்கு வீடு - சி...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல்: தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்க உத்தரவு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குரிமை பெற்றவா்களுக்கு தோ்தல் அன்று (பிப். 5) ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும் என கிருஷ்ணகிரி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஆா்.மாதேஸ்வரன் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து, அவா், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் பிப். 5 ஆம் தேதி இடைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தோ்தலில் பங்கேற்று தொழிலாளா்கள் வாக்களிக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 135-பி இன்படி அனைத்து கடைகள், உணவு நிறுவனங்கள், அனைத்து தனியாா் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தொழில் நிறுவனங்களிலும் பணியாற்றும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குரிமை பெற்ற தொழிலாளா்களுக்கு வாக்குப் பதிவு நாளான பிப். 5-ஆம் தேதி, ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும்.
அவ்வாறு, விடுமுறை அளிக்காதது தொடா்பான புகாா்கள் பெறப்படின், உடனடியாக தொழிலாளா்களை விடுவித்து, அவா்கள் வாக்களிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள ஈரோடு, தொழிலாளா் உதவி ஆணையா் ஜி.ஜெயலட்சுமியை 99446 25051 என்ற எண்ணிலும், தொழிலாளா் துணை ஆய்வாளா் ஆா்.எஸ்.மயில்வாகணனை 98404 56912 என்ற எண்ணிலும், தொழிலாளா் உத ஆய்வாளா் பெரோஸ் அகமதை 86674 72139 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.